மின் தடை பற்றி கேள்வி எழுப்பிய மனைவி; மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் சுவாரஸ்யம்
கோவை: ''மத்திய மின் துறை அமைச்சராக நான் பதவியேற்ற நாளன்று, டில்லியிலும், வட மாநிலங்களிலும் கடுமையான மின் துண்டிப்பு ஏற்பட்டது. அன்றிரவு உறங்கச்சென்ற என்னை, மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படும்போது, நீங்கள் எப்படி துாங்க முடியும் என்று என் மனைவி கேள்வி எழுப்பினார்,'' என்று, கோவையில் தொழில் துறையினருடன் நடந்த கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
யோசனைகள்
கோவையில் நடந்த தொழில்துறை மற்றும் வர்த்தக துறையினருடன் கலந்துரையாடலில் பீயூஷ் கோயல் பேசியதாவது: மிக்க நன்றி, வணக்கம். பிரதமர் மோடி அடிக்கடி கோவையை, தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மையம் என்று குறிப்பிடுவார். அதேபோல் புதுமையான யோசனைகளுடன் வரும் நமது இளம் ஸ்டார்ட்அப்கள். இன்று நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களில் இதுவும் ஒன்று.
புதிய யோசனைகளுடன் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் ஆர்வம், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் ஆகியவற்றை இங்கே காண முடிகிறது. இங்கு 15 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. அதனால் தான் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கும், நாட்டிற்கு எது நல்லது என்பதற்கும், நாங்கள் உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
ஏப்.,23ல்!
நான் ஜவுளித்துறையில் கொள்கை ரீதியான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமான மையங்களில் ஒன்றாக திகழ்ந்தது உங்கள் அண்டை ஊரான திருப்பூர் தான். நான் மின் துறை அமைச்சராக 2014ல் பதவியேற்ற நாளில் டில்லியின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. அது பற்றி ஒரு நாளிதழில் இது பற்றி கிண்டலாக கட்டுரை எழுதினர். அதை சரி செய்வதற்கு ஒரு வாரம், 10 நாட்களாகி விட்டது.
என் மனைவி கேள்வி
அமைச்சராக பதவியேற்ற அன்றைய இரவு நடந்தது எனக்கு நினைவு இருக்கிறது. அன்று நாள் முழுவதும் அலைச்சல் காரணமாக உறங்கச்சென்றபோது, 'மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும்போது நீங்கள் எப்படி துாங்க முடியும்,' என்று என்னிடம் என் மனைவி கேள்வி எழுப்பினார். படுக்கையில் இருந்து என்னை எழுப்பி விட்டு, மின் வினியோகம் சீரமைக்கும் பணியை நேரில் சென்று பார்ப்பதற்காக அனுப்பி வைத்தார். அது தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான நரேந்திர மோடி அரசின் கொள்கையாக இருக்கிறது.
மின் வினியோகம்
தானாக முன் வந்து செயல்படும் அணுகுமுறை தான் எங்களை வழிநடத்துகிறது.
முன்கூட்டியே திட்டமிடுதல், பிரச்னைகளுக்கான புதுமையான தீர்வுகள் ஆகியவற்றை நாங்கள் செய்கிறோம். இதற்கு முன் இருந்தவர்களை காட்டிலும், மோடி அரசு சிறப்பாக சிந்தித்து செயல்படுகிறது. நான் பதவியேற்றபோது, வட மாநில மின் வினியோக கிரிட் செயல் இழந்திருந்தது. அதற்கு பிரதமர் மோடி ஒரு தீர்வு கூறினார். அப்போது மின் வினியோக கிரிட் தனித்தனியாக இருந்தது. அவை அனைத்தையும் ஒன்றிணைக்கும்படி கூறினார். அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
ரூ.2 லட்சம் கோடி
மூன்றரை ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு, ஒரே கிரிட் ஆக இணைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக, நாட்டின் மின் வினியோக கட்டமைப்பு ஒரே கிரிட் ஆக இணைக்கப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் மின் துண்டிப்பு என்பதே கிடையாது. 24 மணி நேரமும் மின் வினியோகம் கிடைக்கிறது. இதற்கு மோடி அரசின் திட்டமிட்ட செயல்பாடு தான் காரணம்.
@quote@அதேபோலத்தான் கோவிட் நேரத்திலும் திட்டமிட்டு செயல்பட்டோம். பிரச்னைகளுக்கு சுமுகமாக தீர்வு கண்டோம். quote
இன்றும் உலகம் முழுவதும், கோவிட், போர் பாதிப்பு ஏற்பட்டபோதும், நமது நாட்டில் பிரச்னைகள் இல்லாமல் இருப்பதற்கு, மத்திய அரசின் திட்டமிட்ட செயல்பாடுகள் தான் காரணம். உலக அரங்கில் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தும் கட்சிக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு பீயூஷ் கோயல் பேசினார்.
@block_P@
கோவை நீலாம்பூரில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறு வயதில் பள்ளிப் படிப்பில் தான் சந்தித்த சவால்களை மேற்கோள் காட்டி பீயூஷ் கோயல் பேசுகையில், '' மாணவர்கள் தங்கள் கனவை எளிதாக நனவாக்க உதவுகிறது புதிய கல்விக் கொள்கை. மாணவர்கள் கல்லூரிகளில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள புதிய கல்விக் கொள்கை வழி வகுக்கும்'' என்றார்.block_P
அருமையான கேள்வி. அறிவுக் கொழுந்து. மத்திய அமைச்சரவையில் மிகவும் திறமைசாலி, பியூஷ் கோயலின் பதிவைப் புரிந்து கொள்ள முடியாத துண்டுச் சீட்டுக்கு ஏற்ற அடிமை. ₹ 200 வந்து
சேரும்
மோடி அய்யா நீங்க ஏன் முதலில் குஜராத் UP MP எல்லாம் டெவெலப் பண்ணிட்டு அப்புறமா தமிழ்நாட்டு பக்கம் வரக்கூடாது , இல்ல உங்க எண்ணம் முதலில் தமிழ்நாட்டை குஜராத் UP MP மாதிரி நாசம் ஆகிட்டு அப்புறமா ஒரே நாடு திட்டத்தில் எல்லாமாநிலத்தையும் ஒண்ணா டெவெலப் பண்ணலாம்னு ஐடியா இருக்கா சார் ,ஏன் எனில் ADMK கூட உங்களுக்கு நல்ல COOP பன்றாங்களே , நாங்க வெய்ட் பண்றோம்மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை