வீரபாண்டியில் தி.மு.க., 'உள்ளடி' அரசியல்: வேட்பாளர் தருண் தப்பிப்பாரா?
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில், தி.மு.க., சார்பில், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலர், டாக்டர் தருண், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனின் மருமகன். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதனின் மகனும் கூட.
புகைச்சல்
தருண், 2021 சட்டசபை தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜமுத்துவிடம், 19,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனினும், மீண்டும் அவருக்கே தி.மு.க., தலைமை 'சீட்' கொடுத்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தோற்ற ஒருவருக்கே மீண்டும் சீட் தந்திருப்பது கட்சி நிர்வாகிகள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது.
புறக்கணிப்பு
இதற்கு சேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் மறைவுக்கு பின், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கூட, கட்சி அங்கீகாரம் கிடைத்ததில்லை என கூறப்படுகிறது. ஆறுமுகத்தின் மகன் ராஜா மறைவுக்கு பிறகும் கூட, அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு, கடந்த முறை போன்று, இத்தேர்தலிலும் சீட் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வீரபாண்டி ஒன்றிய செயலர் வெண்ணிலா, கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ராஜா மகள் மலர்விழி, ஆறுமுகத்தின், 2வது மனைவியின் மகன் பிரபு ஆகியோரும் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், இதை எல்லாம் மீறி தருண் சீட் பெற்றார்.
இதை எதிர்பார்க்காத முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர் அறிவிப்புக்கு பின் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தருண் வேட்பாளராக
தடுக்க முடியாது
அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, வெண்ணிலா, அவரது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தருண் நேரில் சென்று ஆதரவு கேட்க, வெண்ணிலா, அவரது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இருப்பினும் சுரேஷ்குமார், மலர்விழி, பிரபு உள்ளிட்டோரின் ஆதரவை பெற்று, வீரபாண்டி தொகுதியில் தருண் சாதிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இது குறித்து தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் இடையேயான அரசியலில் சிக்கியுள்ள தருண், கரை சேர்வது சிக்கலாக உள்ளது.
அவரது குடும்பத்தினர் உள்ளடி வேலையில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது. தருணுக்கு மட்டுமல்ல அந்த குடும்பத்தில் யாருக்கு சீட் கொடுத்திருந்தாலும், மற்றவர்கள் உள்ளடி வேலையில் தான் ஈடுபடுவர்.
வீராபாண்டி தொகுதியில் தற்போதைய நிலையில் உதயசூரியன் சின்னம், வெற்றி பெறுவது சிக்கலானதே.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சங்கு தான் .