ரிஷிவந்தியத்தில் அரசு பொறியியல் கல்லுாரி: வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் அரசு பொறியியல் கல்லுாரி கட்டித்தருவேன் என தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
ரிஷிவந்தியத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் மலர் துாவி வரவேற்றனர். தொடர்ந்து, வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது;
தமிழகத்திலேயே அதிகபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ரிஷிவந்தியம். கடந்த 5 ஆண்டுகளில் 30 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதும் இங்கு அரசு பொறியியல் கல்லுாரி அமைக்கப்படும். முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு சொந்த நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கினேன். அதுபோல், ராஜநாராயண பெருமாள் கோவிலுக்கும் சொந்த நிதி வழங்கி புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவேன். கட்சி பாகுபாடின்றி பழகி, ரிஷிவந்தியம் வளர்ச்சிக்காக உழைப்பேன் என பேசினார்.
அப்போது ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், நிர்வாகிகள் சிவமுருகன், செல்வகுமார், இதயதுல்லா, துரைராஜ், கண்ணன், சிவக்குமார், சீனிவாசன், காங்., ராதாகிருஷ்ணஜன் இந்திய கம்யூ., கூடுபாஷா, மா.கம்யூ., செந்தில், வி.சி., ஏழுமலை, வேலுமணி, தே.மு.தி.க., அற்புதராஜ், புஷ்பராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர்.
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்