உழவர்கரை காங்., வேட்பாளர் டைமன் நகரில் இறுதி கட்ட பிரசாரம்

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர் நேற்று டைமன் நகர், ராஜம் விஜம் அவென்யூ, டாக்டர் காலனி உள்ளிட்ட பகுதியில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''புதுச்சேரியின் 165 கோடி ரூபாய்க்கும் மேலாக வளர்ச்சிப் பணிகளை செய்து உழவர்கரை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அமைத்து உள்ளோம். ராதாகிருஷ்ணா நகரில் 19.7 கோடி, அரும்பாத்தபுரத்தில் ரூ.19.8 கோடி, உழவர்கரையில் ரூ.15.8 கோடி, ரெட்டியார்பாளையத்தில் ரூ.44.7 கோடி, மூகாம்பிகை நகர் ரூ.10.8 கோடி, ஜவகர் நகர் ரூ.16.7 கோடி செலவில் சாலை, குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி நிதியில் பாவாணார் நகரில் வாய்க்கால் அமைத்து, 585 வீடுகளுக்கு தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டது. பிச்சை வீரன் பேட்டில் 59 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இந்த பணிகள் தொடர கை சின்னத்தில் ஓட்டு அளித்து தன்னை வெற்றி பெற செய்திட வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisement