மீண்டும் என்.ஆர்.காங்., அரசு :என்.ஆர்.காங்., மோகன்தாஸ் நம்பிக்கை
நெட்டப்பாக்கம்:பிள்ளையார்குப்பம், நரம்பை பகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். இறுதி நாளான நேற்று சேலியமேடு பேட், பிள்ளையார்குப்பம் பேட், கந்தன்பேட், ஈச்சங்காடு, நரம்பை பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
வேட்பாளர் மோகன்தாஸ் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையின் அறிவிப்பால் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை குடும்பங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து பதிய பரிணாமத்துடன் வளர்ச்சி அடையும் என பாராட்டுகின்றனர். என்.ஆர்.காங்., அரசு மீண்டும் வருவது உறுதியாகிவிட்டது. ஏம்பலம் தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என்றார்.
மேலும்
-
200 கி.மீ., வேக ரயில்கள் ஐ.சி.எப்., ஆலைக்கு 'ஆர்டர்'
-
அணையில் மதகுகள் மாற்றும் பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்
-
சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
நிதானம் தேவை
-
தேர்தலின் போது நகைகள் எடுத்துச்செல்ல விதிகள் வகுக்கக்கோரி வழக்கு
-
வளைவு பகுதியில் பிளக்ஸ் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்