வளைவு பகுதியில் பிளக்ஸ் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்

கிணத்துக்கடவு: கொண்டம்பட்டியில் இருந்து கிணத்துக்கடவு வரும் ரோட்டின் வளைவு பகுதியில், பிளக்ஸ் வைத்திருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.

கிணத்துக்கடவு - வடசித்தூர் ரோட்டில், தனியார் நிறுவனங்கள் மற்றும் லே-அவுட்கள் அதிகளவில் உள்ளன. இதனால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், லே-அவுட் உரிமையாளர்கள் சிலர், ரோட்டோரம் ஆங்காங்கே விளம்பர பிளக்ஸ்கள் வைத்துள்ளனர்.

இதில், கொண்டம்பட்டி தனியார் கம்பெனி அருகே வளைவான பகுதியில் பெரிய விளம்பர பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்குள்ள பிளக்ஸ்களை உடனடியாக அகற்ற வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement