சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் அவதி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவில் சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு (பொள்ளாச்சி வழி) சிங்கராம்பாளையம் பிரிவில், ரோட்டோரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் மண் தேங்கி அடைப்பு ஏற்பட்டிருப்பதால், சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.

இது மட்டுமின்றி, இந்த ரோட்டோரம் பள்ளம் இருப்பதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும், ரோட்டில் செல்லும் வாகனங்களால், நடந்து செல்லும் மக்கள் மீது கழிவு நீர் தெறிக்கிறது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, கால்வாய் அடைப்பை அகற்றி, கழிவுநீர் வடிந்து செல்லும் வகையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement