இறைச்சி கடையில் ரூ.18 லட்சம் திருட்டு
சேலம்: இறைச்சிக்கடையில் வைத்திருந்த, 18 லட்சம் ரூபாய் திருடு போனது.
சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஜானகிராமன்; இறைச்சி கடைக்காரர். சில மாதங்களாக, அவ்வப்போது மட்டும் கடையை திறந்து வந்தார். அவரது நிலத்தை விற்று, அதில் கிடைத்ததில், 18.10 லட்சம் ரூபாயை மட்டும், 3ம் தேதி, இறைச்சி கடையில் வைத்திருந்தார்.
பின், தங்கை வீட்டில் நடந்த விழாவுக்கு இளம்பிள்ளை சென்று விட்டு, மீண்டும் இறைச்சி கடைக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, 18.10 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வந்தே பாரத்' ரயில் உணவில் பூச்சி ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு
-
பாக்., பல துண்டுகளாக சிதறும் அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை
-
'குரோ' பண்டு திட்டங்களின் பெயர் மாற்றம்
-
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர்... 91 லட்சம்!: இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள்
-
சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
Advertisement
Advertisement