தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள்
இ ந்திய பங்கு சந்தைகள், தொடர்ந்து 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நேற்று காலை வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் காணப்பட்ட சந்தைகள், மதியத்திற்கு மேல் விறுவிறுப்படைந்தன.
தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கியது மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் ஆகியவை, சந்தை மீட்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
நேற்றைய வர்த்தக நிறைவில், சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்ந்து, 74,616 என்ற நிலையிலும்; நிப்டி 155 புள்ளிகள் அதிகரித்து, 23,123 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதம் வரை குறைந்ததும் முதலீட்டாளர்களின் கவலையை குறைத்தது.
இவை தவிர, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய சந்தைகளில் நிலவிய ஏற்றம், இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
அதேநேரம், மேற்காசிய போர் மற்றும் பணவீக்க சூழலை கருத்தில் கொண்டு, இன்று ரிசர்வ் வங்கி கடன் வட்டி விகித கொள்கையில் மாற்றங்கள் ஏதும் செய்யாது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக வங்கி, நிதித்துறை மற்றும் வாகன துறை சார்ந்த பங்குகள் 1.50 சதவீத சரிவை சந்தித்தன.
@block_B@ தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள் (07.04.2026) நிறுவனம் பங்கு விலை (ரூ) உயர்வு(%) எம்பசிஸ் 2,328.10 4.16% விப்ரோ 204.72 3.77% எல்.டி.ஐ., மைண்ட் ட்ரீ 4,442.50 3.14% ஹெச்.சி.எல்.,டெக் 1,441.60 2.73% டி.சி.எஸ்., 2,539.80 2.66% இன்போசிஸ் 1,339.40 2.54%block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்; மத்திய அரசு பரிசீலனை
-
முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4% சரிவு
-
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு.. தீர்வு வருமா?. இடத்தை அளவிட குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.45 கோடியில் குடிநீர் திட்டத்தை முதல்வர் திறந்தும்.. பயனில்லை! 9 ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
-
சொந்த கட்டடமின்றி பள்ளி மாணவியர்.. தவிப்பு! . இடத்தை கல்வி துறைக்கு மாற்ற இழுபறி
-
'எடுபடாத பிரசாரம்; இலக்கில்லாத களம்'
Advertisement
Advertisement