சீமைக்கருவேலம் காடாகும் சக்கரக்கோட்டை கண்மாய்: துார்வாரி ஆழப்படுத்த கோரிக்கை இங்கு வந்து செல்லும் பறவைகளும் பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம்அருகே சக்கரகோட்டை கண்மாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல்சீமைக்கருவேலம் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெயரளவில் பறவைகள் சரணாலயமாக உள்ளது.
விவசாய சாகுபடியும்ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.கோடை காலத்தில் துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
சக்கரகோட்டை ஊராட்சி துவங்கி 24 கி.மீ.,ல் சக்கரகோட்டை கண்மாய் அமைந்துள்ளது. மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு அடுத்தப்படியாக 3வது இடத்தில் பெரிய கண்மாயாக உள்ளது.
இதில் தேங்கும் தண்ணீர் மூலம் ஆண்டு தோறும் 2000 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெற்பயிர், பருத்தி சாகுபடி நடக்கிறது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் ஆக்கிரமிப்புகளால், கண்மாய் நீர்பிடிப்பு பகுதி ஓடை போல மாறி வருகிறது.
சக்கரகோட்டை கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் நாட்டு கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் இங்கு மார்ச் மாதம் சீசன் நேரத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இதையடுத்து பறவைகளை பாதுகாக்க வனத்துறை இப்பகுதியை சரணாலயமாக அறிவித்துள்ளது.
ரூ. பல லட்சம் செலவில் தண்ணீரை தேக்க கண்மாயின் நடுவே பள்ளம் தோண்டியுள்ளனர். தொடர் பராமரிப்பு இல்லாததால் நாட்டு சீமை மரங்கள் அழிந்து தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. போதிய தண்ணீர், மரங்கள் இல்லாதாதல் பறவைகள் வந்து செல்வது குறைந்துள்ளது.
சக்கரக்கோட்டை கண்மாயில் 1674ம் ஆண்டில் சேதுபதி மன்னர் காலத்தில் 14 மடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய் நிறைந்தால் உபரிநீர் வெளியேற ஆயிரம் அடி நீள தெத்து அமைப்பும், மறுகால் வழியும் 16 கலுங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கண்மாய் தண்ணீர் மூலம் 2000 ஏக்கர் அளவிற்கு விவசாயம் நடந்தது. ராமநாதபுரம் பகுதியில் பெய்யும் மழை மற்றும் பெரிய கண்மாய் உபரி நீரரால் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது.
கண்மாயில் மதகு ஷட்டர் இல்லாதாதல் தண்ணீர் வீணாகிறது. வரத்து வாய்க்கால் மேடாகி அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இதனால் சாகுபடி பணிக்கு தண்ணீர் கிடைப்பது பெரிய விஷயமாக உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சக்கரகோட்டை கண்மாய் தற்போது பொதுப்பணித்துறை, வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கண்மாய் தண்ணீர் ராமநாதபுரம், சக்கரகோட்டை, ஆர்.எஸ்.மடை, கண்ணாரேந்தல்(கோவிந்த) அம்மன் கோவில், தெற்கு தரவை, வள்ளிமாடன் வலசை வழியாக சேதுக்கரை கடலில் கண்மாய் தண்ணீர் கலக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு சேதுபதி மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் இன்றும் உள்ளன.
சரிவர பராமரிப்பின்றி மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக வாய்க்காலில் சென்று கடலில் கலக்கிறது. விளை நிலங்களில் தேங்குவதால் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
சக்கரகோட்டை கண்மாய் நீர்பிடிப்பு பகுதி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் ஆண்டு தோறும் இரு போகம் விளைச்சல் கிடைக்கும்.
வனத்துறை மூலம் சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு நாட்டு சீமை கருவேலம் மரங்களை அதிகளவில் நட்டால் பறவைகள் வந்து தங்கி செல்லும்.
துார்வாரி ஆழப்படுத்தி பெரிய நீர்த் தேக்கமாக மாற்றினால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகள் குடிக்கவும், குளிக்கவும் வழிவகை ஏற்படும் எனறனர்.
மேலும்
-
மேற்குவங்கத்தில் பெரிய மாற்றம் நிகழ போகிறது; தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
-
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; பொதுநல வழக்கு தள்ளுபடி
-
அது மட்டும் நடந்தால் தேர்தலில் இருந்து விலகி விடுவேன்; சீமான் சவால்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது