அது மட்டும் நடந்தால் தேர்தலில் இருந்து விலகி விடுவேன்; சீமான் சவால்
நாகர்கோவில்: 'மொழி சிதைந்து, அழிந்து போவதைப்பற்றி காங்கிரசும், பாஜவும், கவலைப்படும் என்று சொன்னால், நான் தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன்,' என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கிள்ளியூர் தொகுதி பிரசாரத்தில் அவர் பேசியதாவது; இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் கேரளா. தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாநிலம் கன்னியாகுமரி என்கிறார்கள். ஆனால், இந்த மாவட்டத்தில் இருந்து எந்த புதிய சிந்தனையும், ஆற்றலும், மாறுதல்களும் வரவில்லை. கற்றறிந்த மக்கள் நம்மில் இருந்து தான் மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
விலகி விடுகிறேன்?
அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தத்துவங்கள், கோட்பாடுகளை ஏற்று வாழ்ந்து வந்திருகிறோம். இதில், ஏதாவது ஒரு பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளதா? இந்தக் காங்கிரஸ், பாஜ கட்சிகள் தமிழகத்திற்கு எதற்கு? ஒவ்வொரு மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள், அவரவர் மாநிலத்தை ஆளட்டும். இந்தியாவை சுழற்சி முறையில் ஆள்வோம்.
இந்த நாட்டை 3 முறை ஒரே மாநிலத்தவரான பிரதமர் மோடி ஆள்கிறார். இந்த நாட்டின் முதன்மை பதவியை குஜராத்திகளான மோடியும், அமித்ஷாவும் வகிக்கிறார்கள். தொல்காப்பியம் பிறந்த ஊரில் மொழி சிதைந்து, அழிந்து போனது. இதைப்பற்றி காங்கிரசும், பாஜவும் கவலைப்படும் என்று சொன்னால், நான் தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன்.
துண்டிக்க முடியாதா?
கொடுத்து கொடுத்து வாழ்ந்த, அரிசிக்கும், பருப்புக்கும் கையேந்துகிறாய், இலவசத்திற்கு ஏங்குகிறாய். இதற்காக இந்தப் பயல்களை ஒழிக்க வேண்டாமா? எதற்கு காங்கிரஸ், கச்சத்தீவை எடுத்துக் கொடுத்ததால், எல்லைத் தாண்டி வந்ததாக 800க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டார்கள். கேரள மீனவன் எல்லைத் தாண்டி சென்றால் ஏன் சுடுவதில்லை?
ஏனெனில், மான மலையாளி மண்ணை ஆள்கிறான். தொட்டால், கொல்வான். ஒரு சிறிய நாடு இலங்கை. உன் நாட்டு மீனவனை சுட்டால் தொலைத்து விடுவேன் என்று சொல்ல முடியாதா? அந்த நாட்டு மீது வர்த்தக, தொழில் ஒப்பந்தத்தை துண்டிக்க முடியாதா? என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வை. ஒரு தமிழனை சுட்டால், நான் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்வேன். மீனவர்களை வைத்தே நெய்தல் படையை உருவாக்குவேன்.
முதல்வர் பதவி கொடுங்க
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ரூ.30. என் ஆத்தாளுக்கு வக்கில்ல. ஒரு 3 வருஷம் கொடுத்தாங்க. ஆட்சி முடிந்துவிட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்தால் ரூ.2000. வளர்ச்சி வந்திடுச்சு. மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 தராங்க. 3 வருஷத்துக்கு அப்புறம் அதுவும் முடிந்தது. அதற்கு பதிலாக வேலை கொடுக்க வேண்டும்.
முதல்வர் பதவிக்கு வந்து எப்படியாவது என் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ரொம்ப கஷ்டப்படுகிறேன். மொத்த ரூ.8000 கூப்பனையும் வைத்துக் கொண்டு முதல்வர் பதவியை மட்டும் எனக்கு கொடுத்திடுங்கள். டாஸ்மாக்கில் சரக்கடித்து 25 லட்சம் பேரின் உயிரை வாங்கிட்டாங்க. அதை திரும்ப கொடுத்திருங்க. கேவலம். இவரு ரூ.8,000. இபிஎஸ் வந்து ரூ.10,000 மற்றும் பிரிட்ஜ். இந்த இலவசத்திற்கான பணத்தை எங்கிருந்து வரும் என்று ஏன் கேள்வி கேட்க மாட்டீங்க.
5வது தலைநகரம்
கன்னியாகுமரியை 5வது தலைநகராக உருவாக்குவேன். சென்னையில் கிடைக்கும் அனைத்தையும் இங்கே கிடைக்க வழிவகை செய்வேன். மதுரை, கோவை, திருச்சி, சென்னை என 5 தலைநகரங்கள். இதைக் கேட்டதும் சிரித்தார்கள். ஸ்டாலின் 5 நகரங்களை உருவாக்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார், இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் ஞானம் இல்லை அன்று அண்ணா முதல் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் வரை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்கள் யாருக்கும் பயன்படாத வெட்டி வேலை தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே தவறு செய்கிறாய் எப்போது வரும் அந்த எண்ணம்.... இல்லை யாருக்கு யார் பயனடைய இந்த பொழப்பு......
அப்போ நீ தேர்தல் இருந்து 200% ஒதுங்க வேண்டியதுதான். பாஜகவை பற்றி குறை கூற உனக்கு தகுதி இல்லை. உன்னை விட 500 மடங்கு மொழியை காப்பற்ற பாடுபடுபவர்கள் பிஜேபி கட்சித் தலைமையில் உள்ளவர்கள்.
மோடி தமிழை காப்பாற்றுகிறார் காங்கிரஸ் எதுவும் பேசவில்லை அண்ணன் அரசியல் விட்டு விலக கரணம் இதுதான்னா எப்போவோ போயிருக்க வேவேண்டும்
காங்கிரஸ், பாஜகவை விடுங்க. தற்போதைய தமிழ்நாட்டு கட்சிகளின் முதல்கட்ட தலைவர்களை அழைத்து 10 திருக்குறள், நாலடியார், புறநானூறு, திரிகடுகம் இவற்றில் 2 செய்யுள் மனப்பாடமாக ஏற்ற இறக்கங்களுடன் சொல்லி அதன் பொருளையும் பொதுவெளியில் விளக்க வேண்டும் எனக்கூறினால் வைகோ, சீமான் தவிர பெத்த நாயினாவிலிருந்து நேற்று வந்த ஜோசப் விஜய் வரை யாரும் தேர்ச்சி அடையமாட்டார்கள். அப்புறம் எதற்கு இந்த நிபந்தனை? வைகோ முதலமைச்சர் பதவிக்கு உகந்தவரா? சீமானுக்காவது திறமை இருக்கிறது. கோவாலுக்கு என்ன இருக்கிறது?
சீமான் பொருள்பட யதார்த்தமாக பேசவில்லை என்றால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்று கத்தி கொண்டே பைத்தியமாக தான் திரிய வேண்டும், இவர் சொல்வதைப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து ஒவ்வொரு முறை ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்க முடியுமா, சீமான் பேச்சு முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதம் மற்றும் உணர்ச்சியை தூண்டும் செயல் அதில் செயலகம் ஒன்றும் கிடையாது.
திமுகவைப் போன்று சீமானும் திருந்து போவதில்லை.
எல்லை தாண்டி திருட்டு மீன் பிடித்தால், சூடுபட்டு சாகத்தான் வேண்டும்.
கிறுக்கு தனமா இருக்கு. என்ன திராவிட காட்சிகள் போராடும் தேர் கூச்சல் மொழியை பற்றி. சொந்த சிந்தனை கிடையாதா? சினிமா உலகிலிருந்து வந்து மொழி பற்றி எதற்கு.
ஐயோ....அப்படியெல்லாம் விலகி விடாதிங்க அப்புறம் எங்களுக்கு இருக்கும் ஒரே என்டர்டெய்ன்மென்டுக்கு யாரை தேடுவோம்.....மன அழுத்தத்தில் இருக்கும் தமிழக மக்கள் உங்களை தான் நம்பி இருக்கிறார்கள் அவர்களை ஏமாற்றி விடாதீர்கள்.....!!!
விஜய்யும் சீமானும் DMK B டீம் , கமல் அண்ட் ரஜனிகாந்த் மாதிரி . DMK பிடிக்காத ஓட்டுக்கள் ADMK க்கு போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்
சீமான் இப்பவே அரசியலை விட்டு விலகலாம். சீமான் சிந்தனை இனிமேல் 5 சத ஓட்டுக்கு மேல் பெற்று தராது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காமராஜர் தமிழர் தான். எடப்பாடியும் தமிழர் தான். சீமான் இலக்கணப்படி எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா இசுடாலின் போன்றோர் தமிழர்கள் இல்லை எனலாம். ஆனால் இந்த நான்குபேரும் சுமார் 1970இல் இருந்து 55வருடம் தமிழகத்தை ஆண்டுள்ளனர். கடந்த 55 வருடத்தில் தான் தமிழ் தேய்ந்தது. இதற்கும் காங்கிரஸ் அல்லது பாஜகவும் எந்த சம்மதமும் இல்லை, சொல்லப்போனால் காங்கிரஸ் அல்லது பாஜக, அதிமுக - திமுகவை விட தேவலாம். எனவே சீமான் தாராளமாக அரசியலை விட்டு விலகலாம். காங்கிரஸ் அல்லது பாஜகவை குறை சொல்வது கோழைத்தனம் மட்டும்மல்ல, நேர்மை அற்ற செயல்.மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா