தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
நமது நிருபர்
சென்னை தலைமை செயலகம் முன் திமுக கொடியை தீயிட்டு எரித்த போலீஸ் ஏட்டு கோதண்டபாணி கைது செய்யப்பட்டார்.
சென்னை ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு ஆக கோதண்டபாணி பணிபுரிந்து வருகிறார். அவரது மகளுக்கு ஏற்பட்ட கால்வலி பிரச்னைக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். இதில் பாதிப்பு ஏற்பட்டதில், மகளின் கால் பாதம் அகற்றப்பட்டுள்ளது.
மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக, சில ஆண்டுகளாக தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இன்று காலை 9:00 மணிக்கு மகளுடன் தலைமை செயலகத்துக்கு கோதண்டபாணி, போலீஸ் சீருடையில் வந்தார். காவலுக்கு இருந்த போலீசார், அசட்டைாக இருந்த நேரத்தில் திமுக கொடியை தீயிட்டு எரித்தார்.
இதைக்கண்டு அங்கு பணியில் இருந்த போலீசார் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். பற்றி எரிந்த திமுக கொடியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக ஏட்டு கோதண்டபாணியை கைது செய்தனர். தன்னை தடுத்த போலீசாரிடம், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைது செய்யப்பட்ட கோதண்டபாணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
தலைமை செயலகம் முன் சீருடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், திமுக கொடியை தீ வைத்து எரித்த சம்பவம், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
வாசகர் கருத்து (32)
Barakat Ali - Medan,இந்தியா
10 ஏப்,2026 - 12:00 Report Abuse
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் அவர் பாடு திண்டாட்டம் ........ 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
09 ஏப்,2026 - 20:35 Report Abuse
ஒரு தந்தை என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். வருத்தங்கள். 0
0
Reply
சூசை - ,
09 ஏப்,2026 - 18:10 Report Abuse
ஒரு தந்தையின் வலி யாருக்கும் இது போல் தவறான சிகச்சை நடக்க கூடாது. பெண் குழந்தையின் வேதனையான வருங்காலத்தை நினைத்து நினைத்து ஆவேசப்படுகிறார். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
09 ஏப்,2026 - 18:07 Report Abuse
யார் தூண்டி விட்டார்களோ? 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
09 ஏப்,2026 - 17:42 Report Abuse
இது அனுதாப ஒட்டு வாங்குறதுக்கு எங்க கமாண்டரே செஞ்ச ஏற்பாடா இருக்கும் ......... 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
09 ஏப்,2026 - 17:24 Report Abuse
இதை எல்லாம் பார்த்துட்டு ஹிந்துக்கள் தீயமுகவிற்குத்தான் வோட்டு போடுவானுங்க ஏதும் நமக்கு நடக்காதவரை 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
09 ஏப்,2026 - 16:16 Report Abuse
எங்கள் ஊர் தேச அபிமானிகள் நிறைந்த அந்த காலத்து பழைய காங்கிரஸ் கோட்டை. அந்த காலத்தில் எம் மக்கள் திமுக கொடியை "தூய்மையான சீலை" என்றே அழைப்பர் . 0
0
Reply
Marai Nayagan - Chennai,இந்தியா
09 ஏப்,2026 - 16:02 Report Abuse
திருட்டு திமுக டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பல குடும்பங்கள் சீரழிந்து உள்ளன...அதில் இந்த போலிஸ் குடும்பமும் ஒன்று...அதர்மம் அழிக்க பட வேண்டும் 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
09 ஏப்,2026 - 15:39 Report Abuse
இந்த காவலரின் குறையைக் கூட இந்த அரசு தீர்க்க வில்லையே? 0
0
Reply
Sun - ,
09 ஏப்,2026 - 15:08 Report Abuse
தலைமைச் செயலகம் முன் கட்சிக் கொடியை எரித்தார் ஒருவர். அபசகுனமான இதற்கு பரிகாரம் தேடி இந்நேரம் ஜோதிடரை தேடி ஓடி இருப்பார்கள் பகுத்தறிவுப் பகலவன்கள். 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement