புகாரால் தாமதமாக ஏற்கப்பட்ட பர்கூர் தி.மு.க., வேட்பாளர் மனு
கிருஷ்ணகிரி, தமிழகம் முழுவதும் நேற்று, சட்டசபை தொகுதி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் பரிசீலனை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக மதியழகன் எம்.எல்.ஏ., வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர், தன் சொத்து பட்டியலை தவறாக கொடுத்துள்ளார். மேலும் வங்கியில் வாங்கிய, 37.80 கோடி ரூபாய் கடன் மற்றும், 4 குவாரிகள் ஏலம் எடுத்த சொத்து விபரங்களை பிரமாண பத்திரத்தில் மறைத்துள்ளதாக, அத்தொகுதியின், அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராசன் தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயாவிடம் புகார் மனு அளித்தார்.
அதன்படி, அந்த மனுவை அலுவலர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, தி.மு.க., வேட்பாளர் மதியழகன் தரப்பில் விளக்கம் கேட்டனர். அதற்கு அவரது தரப்பில் அளித்த விளக்கத்தில், புகாரில் உண்மையில்லை எனவும், மகள் பெயரில் சொத்துகள் மற்றும் தொழிற்சாலை பெயரில் கடனும் உள்ளது எனக்கூறி, அதற்கான விளக்கத்தை அளித்தனர். இதையடுத்து, தி.மு.க., வேட்பாளரின் மனுவை ஏற்பதாக அலுவலர்கள் அறிவித்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு வேட்புமனு பரிசீலனை துவங்கிய நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் புகாரால் சிட்டிங் எம்.எல்.ஏ., மதியழகன் வேட்புமனு மாலை, 4:30 மணிக்கு பின்பே ஏற்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்