தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
கடலுார்: தமிழகத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என, முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார். அவர், கடலுார் தாலுகா, வடக்கு ஒன்றியம், சிங்கிரிகுடி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது:
இப்பகுதியில் அனைவரும் எனக்காக வந்து ஆதரவளித்தது பெரும் வெற்றியாக கருதுகிறேன். உங்களுக்காக என்றும் நான் துணையாக இருப்பேன்.
தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு உருவாக்கி தருகிறேன். வரும் தேர்தலில் எனக்கு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு சம்பத் பேசினார்.
நிகழ்ச்சியில் சேவல் குமார், துணை செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அழகானந்தம், ஜெயமூர்த்தி உட்பட பலர்கலந்து கொண்டனர்.
மேலும்
-
மேற்குவங்கத்தில் பெரிய மாற்றம் நிகழ போகிறது; தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
-
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; பொதுநல வழக்கு தள்ளுபடி
-
அது மட்டும் நடந்தால் தேர்தலில் இருந்து விலகி விடுவேன்; சீமான் சவால்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது