மின்சாரம் தாக்கி பெண் பலி
சிவகங்கை:சாத்தரசன்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி காண்டீபன் 44. இவரது மனைவி சாந்தி 43. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆடு,மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு தனது மாட்டை வீட்டின் அருகே உள்ள முள்வேலியில் சாந்தி கட்ட சென்றார். அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சாந்தி பலியானார். இது குறித்து காண்டீபன் புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement