வேட்பாளர்களை கண்டுகொள்ளாத விவசாயிகள்

பொங்கலுார்;விவசாயிகள் நிறைந்த பல்லடம் தொகுதியில், பெரும்பாலானோர் பண்ணை வீடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் அரசியல் கட்சியினரையோ, வேட்பாளர் வருகையையோ பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. வேட்பாளர்கள் ஊருக்குள் வரும்போது கூட விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருக்கின்றனர்.

அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவதால், கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வேட்பாளர் வரும்போது கூட்டத்தைக் காட்ட, கட்சி நிர்வாகிகள் ஒரு நாளைக்கு முன்பே அவர்களை அணுகுகின்றனர். வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி, தலா 200 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்துக் கூட்டத்திற்கு வரவழைக்கின்றனர்.



வேட்பாளரை மேளதாளங்கள் மற்றும் ஆரத்தியுடன் வரவேற்கத் தனி 'கவனிப்பு' நடக்கிறது. வேட்பாளர் பிரசாரம் முடிந்து சென்றதும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சொன்னபடி தலைக்கு 200 ரூபாயை வினியோகிக்கின்றனர். கூட்டத்திற்கு வரும் இளைஞர்கள் பலர் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களாகவும் உள்ளனர். இரு கட்சிகளிடமும் மாறி மாறிப் பணம் வாங்கும் மக்கள், இறுதியில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது புரியாத புதிர்.

Advertisement