6 வேட்பாளர்கள் வாபஸ்

தேனி:மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிட ஆண்டிபட்டி, போடி தலா 19, பெரியகுளம்(தனி) 15, கம்பம் 21 மனுக்கள் ஏற்கப்பட்டன. பெரியகுளம்(தனி) 2, போடி 3, கம்பத்தில் ஒருவர் என 6 சுயேச்சைகள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

மாலை 3:00 மணி வரை மனுக்கள் வாபாஸ் பெற முடியும். இதனை தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு மேல் தேர்தல்நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement