குஜராத் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் கார்கே
புதுடில்லி: கேரள சட்டசபை தேர்தலையொட்டி, இடுக்கி மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த காங்., பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'பிரதமர் மோடி அவர்களே... முதல்வர் பினராயி விஜயன் அவர்களே...
'குஜராத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ படிப்பறிவு இல்லாதவர்களை உங்களால் ஏமாற்ற முடியும். ஆனால், கேரள மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் படிப்பறிவு உள்ளவர்கள்; மிகவும் புத்திசாலிகள்' என்றார்.
கார்கேவின் இந்த பேச்சு, தேசிய அரசியலில் புயலை கிளப்பியது. குஜராத் மக்களை இழிவுபடுத்தி விட்டதாக, பா.ஜ., தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தன் பேச்சுக்கு கார்கே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரி உள்ளார்.
சமூக வலைதளத்தில் கார்கே வெளியிட்ட பதிவு:
கேரளாவில், தேர்தல் பிரசாரத்தில் நான் பேசிய சில கருத்துகள் வேண்டுமென்றே தவறாக திரித்து வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். குஜராத் மக்கள் மீது எனக்கு எப்போதும் அளவுகடந்த அன்பும், மரியாதையும் உள்ளது. அவர்களை புண்படுத்தும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் கூட அடிக்கடி நெருக்கமாக பழகாதீங்க ன்னு சொன்னா கார்கே கேட்கமாட்டேங்கிறார் .அவர் காற்று இவரிடமும் பத்திக்கிச்சி . அதான் கார்கேவும் மேடையில் எசமான் மாதிரி ஒளறிட்டு பின்பு மன்னிப்பு வாசித்தல் சடங்கு.. தேவையா இந்த கிழட்டு வயதில் ?
ஆன்னா வூன்னா நான் ஒன்றும் saavaarkar அல்ல அப்டின்னு அடிச்சு விடுவார். இப்போ மன்னிப்பு மேல மன்னிப்பு பல்டி
தேர்தல் ளு வருதே. அதுனால ஏகப்பட்ட சீட்டுல மன்னிப்பு ன்னு எழுதி வச்சிருக்காரு.இவரு கான்+கிராஸ் க்கு திணிக்கப்பட்ட தலீவரு. இவரு தலீவரானப்பறம் கொன்+காராஸ் ரிவர்ஸ் ல எத்தினி இஞ்ச் வளர்ந்திருக்குன்னு ரகு யாராச்சும் கேட்டாக்க அதுக்கும் மன்னிப்பு கேட்டுடுவார். மன்னிப்பு ங்குற கத்தரிக்காய் முத்திப்போயி கார்கே கிட்ட விற்பனைக்காக வந்திருக்கு.
இவர் பேசுவதெல்லாம் பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பார். காங்கிரஸ் கட்சியின் பரம்பரை புத்தி அப்படித்தான்.
இவருக்கு படிப்பறிவும் இல்லை பொது
அறிவும் கிடையாது.