போர் நிறுத்தம்: சத்தமில்லாமல் சாதித்த சீனா
- நமது சிறப்பு நிருபர் -
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் தாக்குதல் துவங்க இருந்த நிலையில், சீனா கடைசி நேரத்தில் தன் செல்வாக்கை பயன்படுத்தி சண்டையை நிறுத்திக்கொள்ள ஈரானை சம்மதிக்க வைத்துள்ளது. அதன் பின்னரே 10 அம்ச கோரிக்கை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இருவார போர் நிறுத்தம் அமலானது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்., 28ல் சண்டையை துவங்கின. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பதிலுக்கு ஈரான் கச்சா எண்ணெய் வினியோகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பாதையை கட்டுப்பாட்டில் எடுத்து முடக்கியது.
காலக்கெடு
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் உட்கட்டமைப்புகளை மொத்தமாக அழிக்க உள்ளோம் என கூறி, 48 மணி நேர காலக்கெடு விதித்திருந்தார். இது உலக அளவில் பதற்றத்தை அதிகரித்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சண்டையை நிறுத்த பாகிஸ்தான் நேற்று அதிகாலை வரை தீவிர முயற்சி எடுத்தது.
அமெரிக்கா, ஈரான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி, எகிப்து, சீனாவுக்கு ஒரே இரவில் தொலைபேசி அழைப்புகள் பறந்தன. இந்த பேச்சில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோர் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பேசினர்.
வற்புறுத்தல்
இரு வார காலம் போர் நிறுத்தம் செய்யலாம் என்ற திட்டத்தை பாகிஸ்தான் முன்வைத்தது. இந்த திட்டத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதி அளிப்பது உள்ளிட்ட விவரங்கள் இருந்தன. ஆனால், உண்மையில் இதற்கு ஈரானை சம்மதிக்க வைத்தது சீனா என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ஒரு நாகரிகமே அழியப்போகிறது' என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களுக்குள், ஈரானுடன் சீன வெளியுறவு அதிகாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினர்.
நெருக்கமான செல்வாக்கைப் பயன்படுத்தி, போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள ஈரானை வற்புறுத்தினர். அதன் பின் ஈரான் தரப்பில் இருந்து 10 அம்ச திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அது பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. இதை பேச்சுக்கான அடிப்படை என்ற அளவில் அமெரிக்கா ஏற்றுள்ளது.
பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சியின் இறுதி நேரத்தில் சீனாவின் மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் முன்வைத்த திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
கட்டிப்புடிச்ச இஸ்ரேலையுன், இந்தியாவையும் ஆட்டத்தில் சேத்துக்கலியா? இந்தியாவுக்கு வந்த நல்ல வாய்ப்பை இழந்து விட்டோம். நமக்கு ஆயில் வந்தா சரி.
Indian external minister clearly said we are not a dalal country , so better we take care of our country needs and stay away from these dramas, we all knew why this war and it is not going to end just like that
உண்மையில் இந்த இரு வாரத்தில் தேவையான ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து சப்லை செய்யத்தான் இந்த நிறுத்தம் என்றே இருக்க போகிறது , ஒட்டுமொத்தத்தில் இரானிய விவசாயிகளை பெண்களை , குழந்தைகளை நினைத்து வேதனை அடைகிறேன் .
பன்றிஸ்தான் எல்லாம் இடையில் புகுந்து போர் நிறுத்தம் செய்ய வைத்தது என்றால் உண்மையில் நம்ப முடியவில்லை இது குள்ளன்களின் வேலையாக இருக்கவே வாய்ப்பு அதிகம் எப்படியோ போர் முடிவுக்கு வந்து உலகம் அமைதியாக இருந்தால் சரி போரால் எந்தவொரு தீர்வும் கிடைக்காது மாறாக அழிவே அதிகம் எனக்கு கோபமெல்லாம் அமெரிக்க மக்கள் மீதுதான் ஒரு மன நோயாளி கோமாளியை அதிபராக ஆக்கியதன் விளைவு, உலகமே படாதபாடு படுகிறது அமெரிக்க சட்டப்படி இனி இவர் எப்படியும் அதிபராக வரப்போவது கிடையாது அதனால் இந்த கோமாளி என்ன எழவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்கிறார். அமெரிக்காவிலும் இவரது கட்சிக்குள்ளும் மக்களும் பயங்கர அதிருப்தி மற்றும் எதிர்ப்பு வலுத்து வருகிறது, மேலும் பொருளாதார சிதைவுகளும் அங்கு தாங்க முடியாத அளவு உள்ளது இதனால் இந்த கோமாளி இப்போதைக்கு அடங்கி உள்ளார் உண்மையில் போரை தூண்டிய நெதன்யாகுவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
உண்மை
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
பலியாடு என்னவோ இரானிய முஸ்லிம்கள் என்பதனை மறக்காதீங்க
Mr Unmmai, your comments make everyone laugh out loudly, best joke for the day, wait and watch. Hope you will continue posting your comments in the same nameமேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்