மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
தாராபுரம்: தாராபுரம் தொகுதி, ராமமூர்த்தி நகரில் ஓட்டு சேகரித்த, தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இந்திராணி, மக்களின் அடிப்படை தேவை-களை, உடனடியாக நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த ராமமூர்த்தி நகரில் நேற்று மாலை, தி.மு.க., வேட்பாளர் டாக்டர் இந்திராணி, அப்ப-குதி மக்களிடையே ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் அப்ப-குதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசிய-தாவது:தாராபுரம் தொகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 9,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது-வரை பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைக்கும் போது, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதுநாள் வரை மேல் சிகிச்சைக்காக, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், தாராபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, 6 தளங்களில் பிரமாண்டமான கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. என்னை தேர்ந்தெடுத்தால் இதுபோல, மக்க-ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறை-வேற்றுவேன்.
இவ்வாறு அவர் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து பேசினார். பின்னர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து, மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல், எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், காளிபாளையம், கொளத்துப்பாளையம் பகு-திகளிலும், அவர் பொது மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடு-பட்டார். அப்போது அவருடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை-சாமி, கொளத்துபாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்பு-சாமி, தி.மு.க., கவுன்சிலர் சுந்தரலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ஆனந்தி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்-வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்