பா.ம.க., ராமதாசுக்கு பலர் நம்பிக்கை துரோகம் விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

1

விழுப்புரம்: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் நகராட்சி திடலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

விழுப்புரத்திற்கு பலமுறை நான் வந்தாலும் கடந்தாண்டு ஜனவரி மாதம் வந்ததை மறக்க முடியாது. அன்றைய தினம், கோவிந்தசாமி நினைவரங்கம், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்துள்ளேன். இதை எனது வாழ்நாள் பெருமையாக நினைக்கி றேன்.

1989 ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றதும், ராமதாசை அழைத்து விவாதித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். தற்போது கல்வியில், வேலைவாய்ப்பில் பிற்படுத்தபட்டோர் முன்னேற காரணம் அந்த இடஒதுக்கீடு தான்.

சமூக நீதி வரலாற்றில் தி.மு.க., ஆட்சியில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூக நீதிக்காக போராடுவது தி.மு.க. தான். இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தோருக்கு ரூ. 3 லட்சம் கருணை நிதியும், மாதம் ரூ.3 ஆயிரம் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. சென்னை மாநகர மேயராக நான் இருந்தபோது, ராமசாமி படையாச்சியாருக்கு சிலை நிறுவப்பட்டது.

ராமதாசுக்கு இன்று பலர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர். தி.மு.க.,வும், நானும் சமூகநீதி போராளியாக தான் ராமதாசை பார்க்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி துரோகிகளால் உருவாக்கப்பட்டது. தமிழகத்திற்கு புதிய துரோகங்கள் செய்ய அமைப்பட்டது தான் இந்த கூட்டணி. தமிழகத்தில் நீட் தேர்விற்கு அனுமதித்து, மாணவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் அ.தி.மு.க.,

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை கொச்சைபடுத்தியது அ.தி.மு.க., நுாறு நாட்கள் வேலை திட்டத்தை மத்திய ஆட்சியாளர்கள் நாசம் செய்துள்ளனர். மும்மொழி கொள்கையை திணித்து தமிழகத்தில் இருமொழி கொள்கைக்கு துரோகம் செய்துள்ளனர்.

தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமின்றி சொல்லாததையும் செய்தோம். அந்த வகையில் இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவேன்.

என்னை பொருத்தவரை கோட்டையில் இருந்து தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில்லை. மக்களோடு மக்களாக ஆட்சி செய்ய வேண்டும். இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நான் ஒவ்வொரு ஊர்களில் சாதனை திட்டங்களை பட்டியலிடுகிறோம்.

இது போல் பழனிசாமியால் பட்டியலிட முடியுமா. சொல்வதற்கு உண்மையின்றி பொய்களை வாந்தியெடுக்கிறார். செல்லும் இடங்களில் தரம் கெட்டு பேசுகிறார்.

பழனிசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்னால் மிசாவில் 21 நாட்கள் சிறையிலிருந்து கொடுமைகளை அனுபவித்தவன் நான். சிறைக்கே பயப்படாதவன் நான். ஆனால்,தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பழனிசாமி பேசுகிறார். பழனிமிசாமிக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை நாசப்படுத்த நினைக்கும் பா.ஜ., அ.தி.மு.க., வை வீழ்த்தப்பட வேண்டும். இந்த தேர்தல் டில்லிக்கும், தமிழகத்திற்மான தேர்தல். திராவிட மாடல் ஆட்சி தொடர தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

@block_B@

என்.டி.ஏ., பற்றி ஸ்டாலின் விளக்கம்

விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பரப்புரை பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, என்.டி.ஏ., கூட்டணிக்கு அர்த்தம் தெரியுமா. அது 'நோ டெவலப்மென்ட் அலயன்ஸ்' ஆகும். இதற்கு அர்த்தம் வளர்ச்சி கூட்டணி இல்லை என்பதாகும்.block_B

Advertisement