பணி செய்யாதவர்களுக்கு பதவி கிடையாது :'மாஜி' அமைச்சர் திட்டவட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலம் திறப்பு விழா நடந்தது. பண்ருட்டி தொகுதி வேட்பாளர் மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சம்பத் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

நமது கட்சியினர் எதிர்கட்சியினருடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. தேர்தல் வரை சொந்த வேலைகளை பார்க்காமல் தினமும் மக்களை சந்தித்து வேட்பாளர் மோகன் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

நகர பகுதியில், 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்க வேண்டும். ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் நமது ஆட்சி தான் வர போகிறது.

பண்ருட்டியில் நமது வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.உங்களை கண்காணித்து கொண்டே இருப்பேன். ஒழுங்காக பணி செய்யாதவர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

நகர செயலாளர் சேகர், இணை செயலாளர் ரங்கராஜன், மாவட்ட பிரதிநிதி ராமசந்திரன், அவைத்தலைவர் மனோகர்,பொருளாளர் மோகன்,கவுன்சிலர்கள் புனிதவதி,செல்வகுமார்,மலையான்,இளைஞரணி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement