காலில் விழுவது தமிழர்களின் பண்பு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளிப்படை
ராயபுரம்: ''அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறினார்.
ராயபுரம் தொகுதி வேட்பாளர் ஜெயகுமார், துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம் சாலையில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
எங்களை ஆளாக்கியவர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா தான். நாங்கள் அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் என்ன தவறு உள்ளது.
அ.தி.மு .க., பதவி, பொறுப்பு கிடைத்ததால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு.
உதயநிதி, உங்கள் தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் முதல்வராக இருந்தவர்கள்; உங்களுக்கு வசதி, வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி பெரிய பதவிக்கு வந்துள்ளோம். அந்த வலி எனக்கு தெரியும்.
கட்சிக்காக 51 ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். கட்சி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறை சென்றிருக்கிறேன். நாங்கள் மக்களுக்காக போராட்டம் செய்து சிறை சென்றோம்; நீங்கள் ஊழல் செய்து சிறை சென்றீர்கள்.
அ.தி.மு.க., இப்போது 'அமித்ஷா. தி.மு.க., வாகி விட்டது' என பேசுகின்றனர். நாட்டின் உள்துறை அமைச்சரை பார்க்க செல்வது தவறா; ஏன் அலறுகின்றனர்; பதறுகின்றனர். ஏனென்றால் தி.மு.க.,வினர் ஊழல் அதிகளவில் செய்துள்ளனர். தி.மு.க., மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது. அதனால் பதறுகிறது. இந்த தேர்தலில் தோல்வி ஜூரம் தி.மு.க.,வை ஒட்டி கொண்டது.
சென்னை மேயர் பொம்மையாக உள்ளார்; தகுதியான, திறமையான மேயர் இல்லை. அவர்களை பயன்படுத்தி, தி.மு.க.,வினர் கொள்ளையடித்து வருகின்றனர். தி.மு.க., அரசு கழிப்பறையை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
எத்தனை பேர் காலில் மரியாதை நிமித்தம் காலில் விழுந்திருக்கார். யார் யார் காலில் விழுந்திருக்கார் நம் தலைவர்?
வாய்ப்பில்லை raja
காலில் விழுவது தமிழர் பண்பாடு கிடையாது
ராயபுரம் ஜெயக்குமார் துறைமுகம் மனோ மாபெரும் வெற்றி திரு வி க நகர் பொற்கொடி ஆர்ம்ஸ்ராங்க் வெற்றி உறுதி
புரட்சித் தமிழர் எடப்பாடியார்...
திமுகவில் மிக பெரிதும் மதிķஅப்பட்டவர்
அண்ணாதுரை.ஆனால் அவர் காலில் எம்ஜி ஆரும் சரி கருணாநிதியும் விழுந்ததாக தெரியவில்லை. யார் காலில்
விழுந்தும் அவர்கள் முதல்வராகவில்லை.
அண்ணாதுரை காலில் யாரூம் விழுந்த்தாக தெரியவில்லை. தன்மானமிக்க கருணாநிதி இந்திராகாந்தி காலில் விழுந்த்தாக சொல்லி கொள்கிறார்கள் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. வர வர மாமியார் கழுதை போல ஆனதாக இன்றைய அரசியல் போய் கொண்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் காலில் விழுந்திருக்கலாம்.
பாஸ் காலில் விழுந்து ஆசீர்வாதம் தப்பில்லை பாஸ் அது பிரச்சினையே நீங்க தவழ்ந்து பொய் வாங்கியதுதான்
அவர் எல்லோருக்கும் தெரியும் படி பொது வழியில்தான் காலில் விழுந்து வணங்கினார். அதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை. மற்றவர்களைப் போல எல்லோருக்கும் முன் சுயமரியாதை வேடமிட்டு பின் வெள்ளைக் கொடி ஏந்தி விமானத்தில் பறந்து அம்மா ஈடி ரெய்டுல இருந்து என்னைய, என் குடும்பத்த காப்பாத்துங்க, அய்யா ஈடி ரெய்டுல இருந்து என்னைய, என் குடும்பத்த காப்பாத்துங்கன்னு நாலு சுவத்துக்குள்ள யாருக்கும் தெரியாம ரகசியமா போய் காலில் விழல.
இவருடைய பிரசாரத்தில் ஸ்டாலினை போற்றி பாடலை பாடுகிறார்கள். இது தான் காமெடி பிரசாரம். இவருடைய பிரசாரத்தில் இவரே ஸ்டாலினின் திட்டங்களை வரிசைப்படுத்தி பேசுகிறார். வரிசைப்படுத்தியபிறகு அதில் குறை காணுகிறார். அத்துணை திட்டங்களை வரிசைப்படுத்தும்போது இதற்கு முன்னர் இவர் மைனாரிட்டி அரசை கவர்னர், உயர்நீதிமன்றம் மற்றும் சபாநாயகர் துணை கொண்டு ஒட்டிக்கொண்டிருந்தபோது செயல்படுத்திய திட்டங்களையாவது வரிசைப்படுத்தி பேசுகிறாரா அதுவும் இல்லை இதனால் தான் சொல்கிறேன் ... இவருக்கு பேச்சு எழுதிதருபவர் சுயகோல் அடிக்கவிடுகிறார். ஒரே காமெடியா இருக்கு.
திருவண்ணாமலையில் யார் வேட்பாளர் எனப் பிரச்சாரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் முதல்வர் ஞாபகத்துடன் உள்ளார். அதுதான் காமெடியின் உச்சம்.
தமிழ்நாட்டில் இது வரை ஆண்ட அரசுகளிலேயே மைனாரிட்டி எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சி செய்தது 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த திரு.கருணாநிதி அரசு மட்டும்தான். எடப்பாடி இல்லை. சுய கோல், சேம் சைடு கோல் என்றால் என்னவென்று தெரியுமா? பழனிவேல் தியாகராஜன் போட்ட 30,000 கோடி ஊழல் கோலும் அ.ராசா இப்போது போட்ட ரகசிய ஆடியோ டேப் கோலும்! இவை இரண்டும் தான் பெஸ்ட் சேம் சைடு கோல்கள்.
Every day he is covering more than 10 constituencies and working hard. Even he has attracted more crowds than actor vijay. For the last five years print media in Tamilnadu is one sided and ing adverse report him. All the north indian channels are predicting landslide victory for aiadmk alliance. EPS sir next cm. EPS far better administrator than Stalin
Good to see at least there is one person who can write for ADMK that too in English.
கருணாநிதி இந்திரா காலில்.விழுந்தார். வைகோ, கருணநிதியின் காலில் விழுந்தார்.இவை தான் பெரிய ஆரம்பம்.