பெருமாள் கோவிலில்  சுதர்சன ஹோமம் 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, மஹா சுதர்சன ேஹாமம் நாளை (4ம் தேதி) நடக்கிறது.

காலை, 9:00 முதல், 11:00 மணி வரை மஹா சுதர்சன ஹோமம், தன்வந்திரி ேஹாமம், அஷ்டலட்சுமி ேஹாமம் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடக்கின்றன. ஹோமத்துக்கு தேவையான பொருட்களை, பக்தர்கள் இன்று காலை முதல் வழங்கலாம், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement