சசிகலா கட்சிக்கு எதிராக வேட்பாளர் ;ராமதாஸ் திடீர் அறிவிப்பு
சென்னை:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சசிகலா கட்சி போட்டியிடும் நிலையில், சுயேட்சை வேட்பாளரை, தனது வேட்பாளராக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தமிழ்ராஜ், எனது ஆதரவு பெற்ற வேட்பாளர். அவருக்கு சிலிண்டர் சின்னத்தில் ஓட்டளித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராமதாஸ், 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், சசிகலா கட்சி சார்பில், சென்ன கிருஷ்ணன் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் சுயேட்சையாக, வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தமிழ்ராஜுக்கு, சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அவருக்கு ராமதாஸ் ஆதரவளித்திருக்கிறார். 'கூட்டணிக்குள் இன்னும் என்னன்ன குழப்பம் நேரப் போகிறதோ?' என தரப்பினரும் அச்சப்படுகின்றனர்.
***
மேலும்
-
இந்திய சந்தையில் 10% லாபம் 'பேங்க் ஆப் அமெரிக்கா' கணிப்பு!
-
6 மாதத்தில் பொது சிவில் சட்டம், பெண்களுக்கு மாதம் ரூ.3,000: பா.ஜ.,
-
முதல்வர் மனைவி மீது குற்றச்சாட்டு பவன் கெராவுக்கு முன்ஜாமின்
-
ரூ.500 கோடி திரட்டும் 'கேப்ரி குளோபல் கேபிடல்'
-
நியமன எம்.பி.,யாக ஹரிவன்ஷ் தேர்வு
-
நர்மதை ஆற்றில் கொட்டப்பட்ட 11,000 லிட்டர் பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எச்சரிக்கை