இந்திய சந்தையில் 10% லாபம் 'பேங்க் ஆப் அமெரிக்கா' கணிப்பு!

இந்திய பங்குச் சந்தையில், நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மீண்டும் வேகம் எடுத்தால், முதலீட்டாளர்களுக்கு இரட்டை இலக்க லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக, பிரபல நிதி சேவை நிறுவனமான 'பேங்க் ஆப் அமெரிக்கா' கணித்துள்ளது. இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் வேகம் எடுத்தால், இந்திய சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் குவியும்

 நிறுவனங்களின் வருவாய் குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் சிறிய முன் னேற்றம் ஏற்பட்டால் கூட அது சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

 கொரோனா காலத்திற்கு பிந்தைய குறைந்தபட்ச மதிப்பீட்டு நிலைக்கு தற்போது சந்தை வந்துள்ளது. மேலும், இறக்குமதி வரி தொடர்பான கவலைகளும் தற்போது குறைந்துள்ளன

 சர்வதேச பிரச்னைகளின் தாக்கம் குறைந்து வருவதால், தற்போது முதலீடு செய்வது குறைந்த அபாயத்துடன் கூடிய அதிக லாபத்தை ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பு

 இந்திய பங்குச்சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலிலும், 'எஸ்.ஐ.பி.,' முறையிலான முதலீடுகள் தொடர்ந்து உறுதியாக இருப்பது சந்தைக்கு பெரும் பலம்.

Advertisement