ரூ.500 கோடி திரட்டும் 'கேப்ரி குளோபல் கேபிடல்'

நிதி நிறுவனமான 'கேப்ரி குளோபல் கேபிடல்' நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக, 500 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்போவதாக அறிவித்துள்ளது.

திரட்டப்படும் தொகையில் 75 சதவீதம் கடன் வழங்கவும்; பழைய கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்தப்படும் என்றும் மீதமுள்ள 25 சதவீத தொகை நிறுவனத்தின் பொதுவான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000

தொடங்கும் நாள் ஏப்ரல் 15, 2026

நிறைவு நாள் ஏப்ரல் 28, 2026

முதலீட்டு காலம் 24 - 120 மாதங்கள் வரை

வட்டி ஆண்டுக்கு 9.50% வரை

(மாதம் அல்லது ஆண்டு அடிப்படையில் வழங்கப்படும்)

Advertisement