மகளுக்கு பாலியல் தொந்தரவு; தந்தைக்கு சாகும் வரை சிறை
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த தந்தைக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது எலக்ட்ரீசியன். இவருக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்னையால் முதல் மனைவி பிரிந்து சென்றார். இதையடுத்து, 4 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது மூத்த மனைவியின் மகளுக்கு எலக்ட்ரீஷியன் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். நாங்குநேரி மகளிர் போலீசார் கடந்த 12-ம் தேதி அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 29 நாட்களில் விசாரிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. இவ்வழக்கில் தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கை துரிதமாக விசாரித்து முடித்த போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை எஸ்.பி. பிரசண்ண குமார் பாராட்டினார்.
மேலும்
-
நைஜீரியா பயங்கரவாத வழக்குகள்: 386 பேருக்கு தண்டனை
-
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி தொழில் கொண்டு வர திட்டம் : உதயநிதி புகார்
-
இலங்கை முதியோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு
-
அ.தி.மு.க.,வே ஜெயித்தாலும் பா.ஜ.,தான் ஆட்சி அமைக்கும்: திருப்புத்துாரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
கையேந்தி காசு வாங்கி ஓட்டு போடுவதை விட ஆடு, மாடு வளர்த்து பணம் சம்பாதிக்கலாம். சீமான் பேச்சு
-
குமுளி மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு