நைஜீரியா பயங்கரவாத வழக்குகள்: 386 பேருக்கு தண்டனை
அபுஜா: நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நான்கு நாட்களாக நடத்தப்பட்ட பயங்கரவாத கூட்டு வழக்கின் முடிவில், 300க்கும் மேற்பட்டோருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன.
மே ற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இங்குள்ள பல்வேறு ஆயுதமேந்திய கிளர்ச்சி படைகள் பணத்திற்காக ஆட்கடத்தல் மற்றும் உள்நாட்டு கலவரம் போன்வற்றில் ஈடுபட்டு வருகின்றன.
நைஜீரிய அரசால் குற்றஞ்சாட்டப்பட்ட பல்வேறு நபர்கள் மீதான விசாரணை தலைநகர் அபுஜாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்தது. இதில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 10 நீதிபதிகள் கொண்ட குழு, அவர்களில் பலருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மொத்தமுள்ள 508 வழக்குகளில், 386 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்