குமுளி மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலுார்:குமுளி மலைப்பாதையில் பலத்த காற்றினால் மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம். நேற்று முன்தினம் மாலை வீசிய பலத்த காற்றால் இரைச்சல் பாலம் அருகே மரம் சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. அந்த நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசார், பொதுமக்கள் இணைந்து சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்லும் வகையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றியபின் கடந்து சென்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்
Advertisement
Advertisement