இலங்கை முதியோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு
கொழும்பு: இலங்கையின் மக்கள் தொகையில், கடந்த 40 ஆண்டுகளில் முதியோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
நம் அண்டை நாடான இலங்கையில், 2024ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 17 லட்சத்து 81 ஆயிரத்து 800 ஆக உள்ளது. மேலும், ஒரு சதுர கி.மீ.,க்கு 350 நபர்கள் என்ற அளவில் தேசிய மக்கள் தொகை அடர்த்தி பதிவாகியுள்ளது.
அங்கு, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாக உள்ளது. அதாவது, 40 ஆண்டுகளில், முதியோர் எண்ணிக்கை, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதேவேளையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து, 20.70 சதவீதமாக உள்ளது. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் என உள்ளது.
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்