அரிசி ஏற்றுமதிக்கு விதிகள் தளர்வு

புதுடில்லி: குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யும்போது, ஏற்றுமதி ஆய்வு முகமை வாயிலாக ஆய்வு செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வோர், மேற்கண்ட ஆய்வு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என்ற விதி தொடரும்.

இந்நாடுகளை தவிர, இதர ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய் யும்போது, ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

Advertisement