வர்த்தக துளிகள்

'அடிட்டிவ்' தயாரிப்பு: விப்ரோ 3டி

உடன் டொயோட்டா ஒப்பந்தம்

டொ யோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், 'அடிட்டிவ்' எனும் 3டி தயாரிப்பு துறையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்காக, விப்ரோ 3டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பெங்களூரு அருகே, பிடதியில் உள்ள டொயோட்டா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இந்த மையம் அமையும். மாணவர்களின் கல்வி அறிவுக்கும் தொழிலக தயாரிப்பு திறனுக்கும் இடையிலான இடை வெளியை இந்த பயிற்சி மையம் நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

@block_B@ ஆர்கனானை கையகப்படுத்துதல் இறுதி கட்டத்தில் சன் பார்மா ச ன் பார்மா நிறுவனம், அமெரிக்காவின் ஆர்கனான் அண்டு கோ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கையகப்படுத்தலுக்காக 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிமாற்றத்துக்கு அந்நிறுவனம் தயாராகி வருகிறது. பெண்கள் சுகாதார துறையில் சிறப்பு தயாரிப்புகளை கொண்ட ஆர்கனான் நிறுவனம் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை சன் பார்மா கைப்பற்றினால், இந்திய மருந்து நிறுவனங்களின் வரலாற்றில் மிகப்பெரிய சர்வதேச மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையாக இது இருக்கும்.block_B

Advertisement