உ.பி.,யில் 13 கோடி வாக்காளர்கள்; எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின் அமோகம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு அக்., 27ல் துவங்கியது. மொத்தம் 166 நாட்கள் நடந்த இந்த பணி நேற்று நிறைவடைந்தது.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணியில் 75 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 403 தேர்தல் பதிவு அதிகாரிகள், 12,758 உதவித் தேர்தல் பதிவு அதிகாரிகள், 18,026 ஓட்டுச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள், 1,77,516 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5,82,866 ஓட்டுச்சாவடி நிலை முகவர்களும், வாக்காளர்களும் இந்த முயற்சிக்கு முழு ஒ த்துழைப்பு அளித்தனர்.
கடந்த ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், மொத்தம் 12 கோடியே, 55 லட்சத்து, 56 ஆயிரத்து, 25 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், கூடுதலாக 84 லட்சத்து, 28 ஆயிரத்து, 767 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 கோடியே, 39 லட்சத்து, 84 ஆயிரத்து, 792 ஆக அதிகரித்துள்ளது.
இதில், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 கோடியே, 30 லட்சத்து, 71 ஆயிரத்து, 71 எனவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே, 9 லட்சத்து, 9 ஆயிரத்து, 525 எனவும் மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்னிக்கை 4,206 ஆகவும் உள்ளன. மாவட்ட அளவில் அதிகபட்சமாக பிரயாக்ராஜில் 3,29,421 வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement