உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஓட்டு சேகரிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிட்டிங் எம்.எல்.ஏ., சுந்தரை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

உத்திரமேரூர் அடுத்த ஆதவப்பாக்கத்தில் பிரசாரம் செய்த அவர், வேளாண் துறையில் அரசின் செயல் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், அடுத்து தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கல்வித் துறையில் மேலும் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார். மகளிருக்கான விடியல் பேருந்து மூலம் உத்திரமேரூர் - செங்கல்பட்டு இடையிலான பெண்கள் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு பயணித்து பயன் அடைந்து வருவதாக பேசினார்.

தி.மு.க., ஆட்சியின் சிறப்பான திட்டங்கள் தொடர உத்திரமேரூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சுந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து காவாம்பயிர், புலிவாய், கருவேப்பம் பூண்டி, ஒழுகரை, சி லாம்பாக்கம், திணையாம் பூண்டி, களியாம்பூண்டி, இளநகர், பெருநகர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சுந்தர் பிரசாரம் செய்தார்.

விசூர், மானம்பதி, ராவதநல்லுார், காரணை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், அம்மயைப்பநல்லுாரில் நிறைவு செய்தார்.

இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் ஒன்றிய செயலர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement