ரூ.7.32 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை



கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் முறையில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், 93 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக, 14,891 ரூபாய், குறைந்தபட்சமாக, 12,953 ரூபாய், உருண்டை மஞ்சள் அதிகபட்சமாக, 13,112 ரூபாய், குறைந்தபட்சமாக, 11,791 ரூபாய், பனங்காலி, 31,569 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 5,591 கிலோ மஞ்சள், 7.32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விற்பனை செய்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பழனியம்மாள் கூறுகையில்,''கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில், மஞ்சளின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருளை கிடங்கில் இருப்பு வைத்து சந்தை மதிப்பில், 50 முதல், 75 சதவீதம் வரை ஆண்டுக்கு, 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் பெற்று கொள்ளலாம். உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வசதியும் உள்ளது. மேலும் சந்தேகங்களுக்கு, 99522 67990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement