தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
பவானி, பவானி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும்படை குழுவினர், பட்லுாரில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஓலகடத்தை சேர்ந்த உதயகுமார், 37, பல்சர் பைக்கில் வந்தார். அவரிடம் சோதனை செய்ததில், 66,220 ரூபாய் இருந்தது. மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் வசூலித்த கடன் தொகை என்றார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, பவானி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
* ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதி எல்.ஐ.சி., நகரை சேர்ந்தவர் சங்கர். திருச்செங்கோட்டில் இருந்து வெண்டிபாளையம் காவிரி மின் கதவணை பாலம் வழியே, ஹோண்டா காரில் ஈரோட்டுக்கு நேற்று மதியம் வந்தார். வெண்டிபாளையத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, 70 ஆயிரத்து, 600 ரூபாய் வைத்திருந்தார். உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு
-
அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
-
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள்
-
அச்சம் குடிநீர் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பு பேரூராட்சி நிர்வாக அலட்சியம் தொடர்கிறது
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை
Advertisement
Advertisement