அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, குமாரபாளையம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இப்பகுதிக்கு செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த ரோட்டில், விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கின்றனர். மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு இந்த வழித்தடத்தில் அழைத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இத்துடன், இங்கு குடிநீர் வினியோகித்து, 4 ஆண்டுகளாகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பலர் கேன் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் போர்வெல் தண்ணீரை குடிக்க பயன்படுத்துகின்றனர்.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போர்வெல்லில் நீர்மட்டம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலை, கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. வரும் நாட்களில், சாதாரண தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
பயணியர் நிழற்கூரை அருகாமையில் புதிய மின் கம்பம் சேதமடைந்து குப்பை போன்று போடப்பட்டுள்ளது. சேதமடைந்த மின் கம்பத்துக்கு பதிலாக மாற்றியிருந்தால் பயனுள்ளதாக இருக்கும். இப்படி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'கிராமத்தில், குடிநீர், ரோடு உள்ளிட்ட வசதிகள் இல்லை. தற்போது வரை எவ்வித வசதிகளும் இல்லாமலே சமாளித்து வாழ்கிறோம். குறிப்பாக, இங்கு பொது கழிப்பிடம் இல்லாததால் சிரமமாக உள்ளது. கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட வேண்டும்' என்றனர்.
மேலும்
-
மோசடிகளை தடுக்க தொலைத்தொடர்பு துறையுடன் செபி கைகோர்ப்பு
-
வலுவான முன்னேற்றத்தில் கடன் பத்திர சந்தை
-
பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை
-
ரூ. 8000 கூப்பன் விநியோகிக்க தி.மு.க.வுக்கு தேர்தல் கமிஷன், தடை!
-
நிப்டி 24,000 புள்ளிகளை தாண்டியது 10 லட்சம் கோடி ரூபாய் லாபம்
-
அள்ளிச்சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் கையை சுட்டுக்கொண்ட சாமானியர்கள் 91 சதவீதம் பேர் நஷ்டமடைந்ததாக செபியின் ஆய்வில் தகவல்