காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த காவலக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, பணிநிறைவு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்வின்சென்ட் தலைமை தாங்கினார். கொளஞ்சி, தட்சிணாமூர்த்தி, செந்தாமரைசெல்வி, ரம்யா, வட்டார மேற்பார்வையாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மன்னர்மன்னன், இந்திரா ஆகியோர் பணி நிறைவுபெறும் தலைமை ஆசிரியர் ஜான்வின்சென்டை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.
பள்ளிக்கு இடம் கொடுத்த காவலக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் குடும்பத்தினர் தலைமை ஆசிரியர் ஜான்வின்சென்ட் அவரது மனைவிக்கு மாலை அணி வித்து மேலதாளங்களுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். மாணவ, மாணவிகள் நடனம், பேச்சுப்போட்டி, கலை இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலைத்திருவிழா நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டி சான்று கேடயங்கள் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள்கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு
-
அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
-
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள்
-
அச்சம் குடிநீர் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பு பேரூராட்சி நிர்வாக அலட்சியம் தொடர்கிறது
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை