நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'


தாராபுரம், தாராபுரத்தில் குடிபோதை தகராறில், கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தை சேர்ந்தவர் வேலன், 26; இவரின் நண்பர்களான தாராபுரம் சங்கர் மில் பகுதி கணேசன், 22, அவரது அண்ணன் தமிழரசன், 24, ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு மது குடித்துள்ளார்.


தாராபுரம் பார்க் ரோட்டில் பேசி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. கணேசன், தமிழரசன் இருவரும் வேலனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, சகோதரர்களை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement