தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 8 லட்சத்து, 47,197 ஆண்கள், 9 லட்சத்து, 11,778 பெண்கள், 182 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 17 லட்சத்து, 59,157 வாக்காளர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வகையில், 2,379 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் விபரங்களுடன் கூடிய 'பூத் சிலிப்' அச்சிடப்பட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு நேற்று சென்றடைந்தது.
இதுபற்றி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
தொகுதி வாரியாக வரப்பெற்ற 'பூத் சிலிப்'கள் இன்று முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுவீடாக சென்று, வாக்காளர்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு 'பூத் சிலிப்பிலும்', வாக்காளர் பெயர், ஓட்டுச்சாவடி எண், வாக்காளரின் பாகம் எண், வரிசை எண் போன்ற விபரமும், பின்பக்கத்தில் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வழிகாட்டி (மேப்), க்யூ.ஆர்., கோடு இருக்கும். 'பூத் சிலிப்'புடன் வழிகாட்டி கையேடும் வழங்கப்படும். அந்த கையேட்டில் விழிப்புணர்வு வாசகங்கள், வாக்காளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை, ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட, எடுத்த செல்ல அனுமதிக்கப்பட்ட, 12 ஆவணங்கள் பற்றிய விபரங்கள் இடம் பெறும்.
'பூத் சிலிப்' வழங்கும்போது, வீட்டில் ஆட்கள் இல்லை எனில், ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களின் மொபைல் போன்களை வாங்கி பாதுகாப்பாக வைத்திக்கும் அலுவலர் வசம், எஞ்சிய பூத் சிலிப்கள் இருக்கும். அவர்களிடம் பெற்று கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு
-
அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
-
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள்
-
அச்சம் குடிநீர் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பு பேரூராட்சி நிர்வாக அலட்சியம் தொடர்கிறது
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை