நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்

க டலுார், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் ஸ்ரீ பாடலீஸ்வரர் துவக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி நுாற்றாண்டை கடந்து இயங்கி வருகிறது.

இப்பள்ளியை கடந்த 1917ம் ஆண்டு ஞானியார் அடிகளார், முத்துமல்லா ரெட்டியார் ஆகியோர் 'தரும பாடசாலை' என்ற பெயரில் இப்பகுதி மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்ய துவக்கினர்.

1923ம் ஆண்டு நாகப்ப செட்டியார் மூலமாக 'குருகுலம்' என்ற பெயருடன் இப்பள்ளி இயங்கியது. ஆங்கிலேயரின் ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சில ஆண்டுகள் பள்ளி இயங்கவில்லை.

1949ம் ஆண்டு நாகப்ப செட்டியாரின் செயலாளர் சுந்தரேசன் இப்பள்ளியை 'ஸ்ரீபாடலீஸ்வரர் தரும பாடசாலை' என்ற பெயரில் துவக்க ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் பள்ளியை திறந்து வைத்தார். 1962ல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

பள்ளியின் முன்னாள் நிர்வாக குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் வீரராகவன் ஆகியோரின் முயற்சியால் 1993ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1996ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.

தற்போதுள்ள பள்ளி நிர்வாகக்குழு தலைவர் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா, செயலர் நவநீதகிருஷ்ணன், இணை செயலர் கலிவரதன் வழிகாட்டுதல்படி பள்ளி சிறப்பாக இயங்குகிறது. 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான பாடலீஸ்வரர் துவக்க பள்ளி தலைமை ஆசிரியராக கண்மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பாரஸ்மல் ஜெயின் உள்ளனர்.

இப்பள்ளி 1 முதல், 8ம் வகுப்பு வரை அரசு நிதியுதவியுடனும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுயநிதியுடனும் இயங்குகிறது. வியாபாரிகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரி வைச் சேர்ந்த 270 மாணவர்கள் படிக்கின்றனர்.

இங்கு, 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2 அறிவியல் ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வு கூடங்கள், நுாலகம், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி உள்ளன.

கல்விக்குழு உப தலைவர் கார்த்திகேயன், புரவலர்கள் பாரஸ்மல் ஜெயின், சுகந்தி மளிகை செல்லபாண்டியன், டாக்டர் பார்த்தசாரதி, வள்ளி விலாஸ் கணேசன், கன்ஷியாம் ஜெயின், தொழிலதிபர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்ற சப் கலெக்டர் சீனுவாசராவ், கே.வி.டெக்ஸ் உரிமையாளர் கண்ணப்பன், அகர்வால் சுவீட்ஸ் எழிலரசன், சென்னை வி.வி.சி.டி., மற்றும் சென்னை விஷன் பவுண்டேஷன், யோகிராம் ரவி, வள்ளலார் மெடிக்கல் பாபு ஆகியோர் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர்.

@block_B@

அனைத்து மாணவர்களுக்கும் கல்வி



பள்ளி முன்னாள் நிர்வாக குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் செயலர் வீரராகவன் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சிக்கு கண்ட கனவுகளை நிறைவேற்றுவதே எங்களின் குறிக்கோள். குறிப்பாக, ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் சமூக பொருளாதார நிலையை கடந்து கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு, கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை.


பெண்கள் கல்வியறிவு பெறுவதில் கவனம் செலுத்தி, நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்வி மூலமாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். நாட்டிற்கு தொண்டாற்றிய தலைவர்களுக்கு விழா நடத்தி, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உதாரணமாக கூறி மாணவர்களை வழிநடத்துகிறோம். அபாகஸ் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், செஸ் விளையாட்டு, வாலிபால், மாவட்ட அளவிலான இலக்கிய போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து, பரிசுகளை வெல்லக் கூடிய திறமையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வளர்த்து வருகின்றனர்.

டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா, தலைவர், பள்ளி நிர்வாகக்குழு.block_B

@block_B@

சிறந்த மாணவர்களைஉருவாக்குவது லட்சியம்



இப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பில் 89 சதவீதம், பிளஸ் 1ல் 81 சதவீதம், பிளஸ் 2வில் 94 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 2023-24ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ் 1ல் 93 சதவீதம் தேர்ச்சி கிடைத்தது. 2024-25ல் 10ம் வகுப்பில் 92 சதவீதம், பிளஸ் 1ல் 100 சதவீதம், பிளஸ் 2வில் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகள், இன்ஜினியர்களாக உருவாக்குவதுதான் நோக்கம். அனுபவமிக்க ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பயின்ற மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கிய பதவி வகிக்கின்றனர். குறிப்பாக, தொழிலதிபர்கள், ஆடிட்டர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நடிகர்களாக உள்ளனர். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

-இமயவரம்பன், தலைமை ஆசிரியர்.block_B

@block_B@

பள்ளியில் படித்தது பெருமை



இங்கு படித்த ஆரம்ப கல்வியே தொழிலதிபராக உயர காரணமாக அமைந்தது. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறேன். இங்கு படித்தது பெருமையாக உள்ளது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு சிறந்த மாணவர்களை உருவாக்கியது. பள்ளியில் படித்த நினைவுகள் எப்போதும் நினைவுக்கு வரும். மாணவர்கள் நன்றாக படிக்க ஆசிரியர்கள் ஊக்கம் அளிக்கின்றனர். மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் கல்வி பணியை சிறப்பாக செய்கின்றனர்.

-கண்ணப்பன், உரிமையாளர், கே.வி.டெக்ஸ், கடலுார்.block_B

@block_B@

நலத்திட்ட உதவி வழங்கல்



இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல், 2ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி அமைந்துள்ள வழியாக செல்லும் போது, மண் தரையில் அமர்ந்து படித்த அனுபவங்கள் தற்போதும் நினைவுக்கு வரும். பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் தின விழா, பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி சார்பில் மாணவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.

-ஆனந்த்குமார், உரிமையாளர், ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி, கடலுார்.block_B

@block_B@

பள்ளி வளர்ச்சிக்குஉறுதுணை



நான் கடந்த 15 ஆண்டுகளாக இப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சி. புதிய நன்கொடையாளர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும். பள்ளியின் முன்னேற்றத்திற்கும், சிறந்த முறையில் பாடம் நடத்தி திறமையான மாணவர்களை உருவாக்கவும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக உள்ளனர். குறிப்பாக, மாணவர்களை ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளாக பார்க்கின்றனர். பாடங்களை கற்றுத்தருவது மட்டுமின்றி வாழ்க்கையில் முன்னேற அறிவுரைகளையும் வழங்குகின்றனர்.

-செல்லபாண்டியன், தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர், கடலுார்.block_B

@block_B@

மாணவர்கள்நலனில் அக்கறை



இங்கு, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்தேன். தற்போது, வழக்கறிஞராக பணிபுரிகிறேன். ஆசிரியர்கள் கல்வி மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் கற்று தந்தனர். தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தினர். மாணவர்கள் கல்வியில் முன்னேற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். தனியார் பள்ளியில் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், இதுபோன்ற பள்ளியில் படித்தாலும் வாழ்வில் முன்னேறலாம் என்பதற்கு இந்த பள்ளியே சாட்சியாகும்.

-சத்தியராஜ், வழக்கறிஞர், கடலுார்.block_B

@block_B@

'தினமலர் நாளிதழ்'சேவைக்கு பாராட்டு



நானும் என் சகோதரர் துரை சீனிவாசனும் இப்பள்ளியில் 2ம் வகுப்பு வரை படித்தோம். கடலுாரில் மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ், ஓட்டல் வைகை, விடுதி நடத்தி வந்தேன். தற்போது புதுச்சேரியில் ஓட்டல் காமாட்சி பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருகிறேன். இங்கு பயின்ற கல்வி அனுபவம் தற்போதும், நினைவுக்கு வரும். பள்ளி நலனில் எப்போதும், அக்கறை செலுத்துவேன். நான் தொழிலதிபராக உயர காரணமாக இருந்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி. பள்ளி மென்மேலும் சிறந்து விளங்க உறுதுணையாக இருப்பேன். பள்ளியின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த 'தினமலர்' நாளிதழிற்கு நன்றி.

-துரை கோவிந்தராஜன், தொழிலதிபர், கடலுார்.block_B

@block_B@

ஆசிரியர்கள் கட்டுப்பாடு



இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக இயங்கியபோது, 2ம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் வழிக்கல்வியில் படித்தேன். இங்கு படித்ததன் காரணமாக கடலுார் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் பள்ளி அளவில் 3ம் இடம் பிடித்தேன். தலைமை ஆசிரியர் சுந்தரரேசன், ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தினர். குறிப்பாக, மாணவர்களை கட்டுப்பாடுடன் வழி நடத்தினர். மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஆசிரியர்கள் கடுமையாக உழைத்தனர்.

-கண்ணுசாமி, ஆடிட்டர், கடலுார்.block_B

@block_B@

வாழ்வில் முன்னேற அடித்தளம்

இங்கு ஆரம்ப கல்வியை பயின்றேன். ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் இந்தியா சார்பில் கடந்த 2023ம் ஆண்டு தலைவராக பதவி வகித்த போது, பள்ளிக்கு தேவையான கழிவறை கட்டடம் கட்டித் தர ஏற்பாடு செய்தேன். தனிப்பட்ட முறையில் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போது, மாணவர்களுக்கு கல்வி உபரணங்களை வழங்கி வருகிறேன். நான் வாழ்வில் முன்னேற இப் பள்ளி அடித்தளமாக அமைந்தது.

-சுரேந்தர், வங்கி ஊழியர், கடலுார்.block_B

@block_B@

ஏழை மக்களுக்கு பயன்



கடலுார் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி மிகவும் பழமையானது. இங்கு ஒன்றாம் வகுப்பு படித்தேன். பள்ளியில் கா லை இறை வணக்கத்தின் போது, சரஸ்வதி பாடல், விநாயகர், முருகர் பாடல் பாடப்படும். இப்பள்ளி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஒழுக்கம் நிறைந்த இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

-டாக்டர் பார்த்தசாரதி, கடலுார்.block_B

Advertisement