பிரதமர் மோடி ஏப்.,18ல் தமிழகம் வருகை; கோவை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
புதுடில்லி: மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏப்.,18ல் கோவையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பா.ஜ., பொறுப்பாளர்களுடன் இணைந்து, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய பா.ஜ., அரசின் திட்டங்கள் பற்றி விளக்கி கூறுமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, பிரதமர் மோடி, ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்த, 'எனது பூத் வலிமையான பூத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 13), 'ஆன்லைனில்' உரையாடுகிறார்.
இது குறித்து, அவர் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது நமது தமிழக பாஜவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நாளை மாலை நடைபெறும் 'எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்' நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது தொண்டர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கோவையில் ஏப்.,18 ல் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
பிரதமர் சென்னை யில் பிரச்சாரம் செய்வதே பொருத்தம். சென்னை மற்றும் மதுரையில் பேசினால் கூட்டணியின் வாய்ப்பு அதிகமாகும். யாராவது எடுத்து சொல்வார்களா?
ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கமான தி மு க வுக்கு இனி அதே ஸ்டிக்கரை அவரவர் வாயிலே ஒட்டவைத்து விடுற தேர்தல் இது. ரொம்ப ஆடாதீங்க உங்கள் நகைப்புக்கு ஆப்பு மே ஐந்தில்.
இவரே வந்து கோவை பகுதியில் பரப்புரை செய்து அப்புறம் கோவை பகுதியில் ஒரு வெற்றியும் பி ஜெ பி க்கோ இல்லை பி ஜி பி கூட்டணிக்கோ கிடைக்கவில்லை என்றால் பிரதமருக்கு எத்துணை பெரிய அவமானம் ?? மோடியின் ராசி எப்போதும் தமிழகத்தில் எப்போதும் துரதிருஷ்டம் தான்.மோடி கால் வாய்க்கும் இடம் எல்லாவற்றிலும் இது வரை திமுக தான் ஜெயித்திருக்கு ... பல முன்னுதாரணங்கள் இருக்கு.செந்தில் பாலாஜியின் அரசியல் க்ராஃப் பல படி மேலே போக மோடி வாய்ப்பு தருகிறார்.
பரப்புரை செய்ய தேர்வு செய்த பகுதி தான் தவறு . வானதி ஸ்ரீநிவாசன் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று.
இன்னொரு கோணத்தில் பார்த்தல் செந்தில்பாலாஜி கண்டு அத்துணை பயமா பிரதமருக்கு ?? அதை நினைத்தால் தான் இன்னும் கஷ்டமா இருக்கு
பல தடவை தமிழ்நாட்டில் ஊழலை அடியோடு ஒழித்த இவர் மீண்டும் ஊழலை ஒழிக்க வருகிறார் .தமிழக மக்களே ஜாக்கிரதை .
ஆர்டிஸ்ட் விஜயை சமாளிக்க டெல்லியில் இருந்து ஒரு ஆர்ட்டிஸ்ட் இறக்கியுள்ளார்களோ
, உங்க கருத்து புரிய இன்னும் பத்து வருசமாகும்
ஏல ஆர்டிஸ்ட் , விஜயை சமாளிக்க வக்கு இல்லை வந்துட்டே கருத்து போட
மர மண்டை ஓவியமே ..பலமுறை சொன்னது போல ECG xray ellam ரெடியா இருக்கட்டும்மேலும்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு
-
அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
-
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள்
-
அச்சம் குடிநீர் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பு பேரூராட்சி நிர்வாக அலட்சியம் தொடர்கிறது
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை