அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல; அண்ணாமலை விமர்சனம்
காரைக்குடி: 'அரசியல் என்பது ஒரு வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை' என சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் பிரசாரத்தில் பேசாமல் சென்ற விஜயை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், மக்கள் கூறும் பிரச்னையை கேட்க வேண்டும். அதனை தீர்க்க எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும். காங்கிரசின் ஒரு குடும்பம் மொத்த காரைக்குடியையும் பிடித்து வைத்து இருக்கிறார்கள். சிதம்பரம் குடும்பத்தை பார்த்தீர்கள் என்றால், அவருக்கு பிறகு அவரது மகன். அவர்கள் காரைக்குடி, சிவகங்கைக்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்று கேட்டால், எதுவும் இல்லை.


வண்டியின் மேல
காரைக்குடியில் பார்த்தேன். இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் ரோடு ஷோ நடந்தது.வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை. வெயிலில் மக்கள் எப்படி இருக்கிறார்களோ, அவர்களுடன் இருக்க வேண்டும். காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். 9ஆண்டு அவர் சிறையிலும் இருந்து இருக்கிறார். காமராஜரின் மொத்த வாழ்க்கையில் 9 ஆண்டு காலம் சிறையில் இருந்து இருக்கிறார். கஷ்டத்தை பார்த்து இருக்கிறார். இன்றைக்கு வரும் எந்த அரசியல்வாதியையும் நான் தவறாக சொல்லவில்லை.
மாற்றம்
இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள். 18 வயதில் ஓட்டு போடக்கூடிய இளைஞர்கள் 17 லட்சம் பேர் இருக்கின்றனர். தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது.
20 வயதில் இருந்து 29 வயது வரைக்கும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் இருக்கிறீர்கள். 29 வயதிற்கு கீழ், ஒரு கோடியே 28 லட்சம் பேர் இந்த முறை ஓட்டு செலுத்த இருக்கிறார்கள். இளைஞர்கள் பட்டாளத்திற்கு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மாற்றம் என்பது உங்களுக்காக தான் பேசிக் கொண்டு இருக்கிறோம். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கடந்த தேர்தல் அறிக்கையின் 'கட், காப்பி, பேஸ்ட். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
காமராஜர் சுதந்திர போராட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார். ஆனால் அது குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதையில்லை
பேச்சு மட்டுமே அரசியல் கிடையாது, அதனைவிட அவர்கள் செய்யப்போகும் செயல்தான் முக்கியம். ஐயா காமராஜர் அவர்களிடம் பேச்சு குறைவு, ஆனால் அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அதனால் தான் மீண்டும் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என அனைவரும் மறக்காமல் கூறுகின்றனர்.
வீட்டுக்கு முன்பு சட்டையை கழட்டிபோட்டுகிட்டு சவுக்கெடுத்து அடிச்சுகறதுதான் அரசியலா ? இந்த அரசியல் பாடம் படிக்கதான் வெளிநாடு போனீங்களா?
வாயால் வடை சுடுவதும் அரசியல் அல்ல,
படித்த அண்ணாமலையாரே எதற்க்கெடுத்தாலும் குறை காண்பது அரசியல் நாகரீகம் கிடையாது. மறைந்த எம்ஜிஆர் கை அசைத்தாலே போதும் வெற்றித்தான். நீங்களும் தான் எல்லா அரசியல் கூட்டங்களிலும் திறமையாக பேசினீர்கள், தோல்வி கண்டீர்களே கோவையில்.
கோவையில் மட்டுமா ??
திமுக அறிக்கையை மேற்கு வங்காளத்தில் காப்பி பேஸ்ட் பண்ணியது யாரு பிஜேபி என்னும் பாஜ கட்சி தானே
பாவம் தமிழ்நாடு பெங்களூரு இரண்டு மாநில முதல்வர் அப்படி யே டெல்லி சென்று PM அதற்கு பிறகு அப்படியே USA சென்று TRUMP உடன் போட்டி என்று எல்லாம் இவரே ஸ்கிரிப்ட் எழுதி பரவ விட்டு
இன்று DEMONITAZITION இல் 1000 ரூபாய்க்கு ஆன கதி இப்ப இவர் நிலை . அண்ணாமலை
அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல ஆமா லைப் TIME தெருவில் நின்று கைகாட்டுவது சரி தானே அண்ணாமலை யால் தேர்தலில் இந்த ஜென்மத்தில் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது ஏதாவது நியமன பதவி கிடைத்தால் உண்டு
அரசியலின் ஆழம் தெரியாமல் ஒரு சிலர் அந்த அரசியலில் குதித்துவிடுகின்றனர்.
அதனால் தான் அப்பாவுக்கு டயாலிசிஸ் பண்ணனும் என்று சொல்லி ஒதுங்கி கொண்டார் பாவம் ரிசல்ட் ஏற்கனவே தெரிந்தவர்
மருத்துவ விடுப்பு கேட்டுவிட்டு இப்போ மட்டும் பிரசாரம் செய்வது ஏனோ ??
anna annamalai sir please go and explain to the Tamilnadu people about central government benefits and how to utilise train them or help them with your BJP team. simply looking others no good.மேலும்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு
-
அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
-
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள்
-
அச்சம் குடிநீர் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பு பேரூராட்சி நிர்வாக அலட்சியம் தொடர்கிறது
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை