பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

20

மும்பை: பிரபல பாடகி ஆஷா போஸ்லே, 92, உடல் நலக்குறைவால் காலமானார்.


பிரபல பாடகி ஆஷா போஸ்லே, 92, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நுரையீரல் பாதிப்பு, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அவர் இன்று (ஏப்ரல் 12) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கியில் 1933ம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார். ஹிந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் 70 ஆண்டுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.



தாதாசாஹிப் பால்கே, பத்மவிபூஷன் விருதுகளை பெற்ற ஆஷா, இரண்டு முறை தேசிய விருதும் பெற்று இருக்கிறார். இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பிரபலமான செண்பகமே... செண்பகமே பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு….

மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும், திரை வாழ்க்கையும் குறித்து, தினமலர் சினிமா பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்


@block_P@

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆஷா போஸ்லேவின் மறைவு செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். பல ஆண்டுகளாக நீடித்த அவரது இசைப் பயணம், நமது கலாசாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் எண்ணற்ற இதயங்களைத் தொட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பாடல்கள் மக்களின் மனதில் என்றென்றும் எதிரொலிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.block_P

Advertisement