தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும்; வைகோ நம்பிக்கை
சென்னை: தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ கூறியதாவது:திராவிட இயக்கத்தை அழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். அது எந்த காலத்திலும் நடக்காது. திராவிட இயக்கம் என்ற தியாகிகள் கோட்டையின் பக்கம், எவரும் நெருங்க முடியாது.
தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாதுகாக்க தி.மு.க., அரசு தொடர வேண்டும். இந்த தேர்தலில், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும். அதற்கு, தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களே வழிவகுக்கும்.
'ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன்' என, 11 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் இரு கரங்களையும் பிடித்து உறுதியளித்தேன். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக பேசுகிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது ஸ்டெர்லைட் முதலாளிகளுக்கு எடுபிடியாக இருந்து, 13 உயிர்களை பலி கொண்டார். இவ்வாறு வைகோ கூறினார்.
enna saiyarathu ???மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?