30 ஆண்டுகள் ஆண்ட வரலாறு படைத்த கட்சி அ.தி.மு.க., தான்: சம்பத் பெருமிதம்
கடலுார்: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகாலம் ஆண்ட வரலாறு படைத்த கட்சி அ.தி.மு.க., தான். என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
அ.தி.மு.க., சார்பில் தேர்தல் அவசர ஆலோசனை கூட்டம் கடலுார் சீத்தாராம் நகரில் நடந்தது. அவைத்தலைவர் சேவல்குமார்,டாக்டர் சீனிவாசன், தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் பாலகிருஷ்ணன், பக்கிரி, மாதவன் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர் சம்பத் தலைமை தாங்கி பேசியதாவது: கிராமப்பகுதியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை பிரித்து கொடுத்துள்ளோம். அதில் எந்தளவுக்கு பணிகள் முடிந்துள்ளது. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டம். நம் கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிக்காரர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வரும் 20ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்கவேண்டும். நாம் தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆண்ட வரலாறு அ.தி.மு.க.,கட்சிக்கு மட்டும்தான் உள்ளது. தி.மு.க., வுக்கு அந்த வரலாறு கிடையாது.
தேர்தல் கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க., 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளனர். இனி வரக்கூடிய ஆட்சி நமது பழனிசாமி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் எனக்கு அளிக்கும் ஓட்டுக்கு வாழ்நாள் முழுக்க நான் உங்களுக்கு நன்றிக்கடனை திருப்ப செலுத்தும்,வாய்ப்பை வழங்கவேண்டும் எனப் பேசினார்.
மீனவரணி மாநில துணை செயலாளர் தங்கமணி, பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
விஜய் நெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தி.மு.க., வியூகம் - ஏமாறும் பழனிசாமி
-
மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் காஞ்சி வேட்பாளர் நித்யா சுகுமார்
-
'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை: சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்