அன்னமலை முருகன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.:
மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் உள்ளது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக திருப்பணிகள் மேற்கொண்டு கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசி பொலிவுப்படுத்தினர்.
பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையை தொடர்ந்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் இரண்டாம் சன்னிதானம் சாந்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை திருக்குட நீராட்டு பெருவிழா நடக்கிறது.
விழாவின் ஒரு பகுதியாக மகா தரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், அலங்கார பூஜை தரிசனம், அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்தி வருகிறார். நாளை, 14 ம் தேதி காலை,8:30 மணிக்கு தமிழ் புத்தாண்டை ஒட்டி, 37 ம் ஆண்டு காவடி பெருவிழா சிறப்பாக நடக்கிறது.
மேலும்
-
இலவசங்களை நோக்கி சென்று தன்மானத்தை இழக்காதீர்கள்: ஆண்டிபட்டியில் சீமான் ஆவேசம்
-
தி.மு.க., வாக்குறுதிகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்குமா? கேட்கிறார் தினகரன்
-
தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும்; வைகோ நம்பிக்கை
-
30 ஆண்டுகள் ஆண்ட வரலாறு படைத்த கட்சி அ.தி.மு.க., தான்: சம்பத் பெருமிதம்
-
நானும் டெல்டாக்காரன்தான்; சொல்லிக்கொள்கிறார் உதயநிதி
-
திடீரென தீப்பிடித்த சிமெண்ட் லாரி 40 டன் சிமெண்ட் மூட்டைகள் சேதம்: திட்டக்குடி அருகே பரபரப்பு