புகார் பெட்டி
தெரு நாய்கள் தொல்லை
மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரத்தீஷ், மோதிலால் நகர்.
மின் விளக்கு எரியவில்லை
அரும்பார்த்தபுரம், புறவழிச்சாலையில் சில இடங்களில் மின்விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ராமகிருஷ்ணன், வெங்கடேஸ்வரா நகர்.
குண்டும் குழியுமான சாலை
புதுச்சேரி வி.வி.பி., நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கணேசன், வி.வி.பி.,நகர்.
பயணியர் நிழற்குடை தேவை
தவளக்குப்பம் சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணி, தவளக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
சுப்பையா சாலை ரயில் நிலையம் முன்பு வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், புதுச்சேரி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement