ஆரத்தி தட்டில் பணம் போட்டவர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் கோபிநாத், தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கமலா நகரில், கட்சியினருடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை மூன்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
வேட்பாளரின் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர், அந்த பெண்களின் தட்டில், தலா, 100 ரூபாய் போட்டுள்ளார். பிரசாரத்தை கண்காணித்த தேர்தல் அலுவலர்கள், கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அடையாளம் தெரியாத ஒருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement